Menu Left Menu Right
தமிழ்நாடு
திருவொற்றியூர் பகுதியில் கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் பதற்றம்
Default

திருவொற்றியூர் : நிலநடுக்க பீதியால் வடசென்னை கடலோர பகுதிகளான திருவொற்றியூர், எண்ணூரில் வசிக்கும் மீனவர்களிடையே பதற்றம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கையால் கடலோரத்தில் வசிக்கும் மீனவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு போலீசாரும் வருவாய்துறையினரும் திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர். கடலோரத்தில் உள்ள எண்ணூர் விரைவு சாலையில் ராமகிருஷ்ணா நகரிலிருந்து தாழங்குப்பம் செல்லக்கூடிய வாகனங்கள் மாற்றுப்பாதைக்கு திருப்பிவிடப்பட்டன. இதனிடையே மாலை 5.40 மணிக்கு திருவொற்றியூர் கடற்கரையில் 30 மீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இதனால் சுனாமி வருமோ என்ற அச்சம் ஏற்பட்டது.

எம்எல்ஏ குப்பன், மாதவரம் தாசில்தார் வரதராவ் ஆகியோர் நல்லதண்ணிஓடைகுப்பத்துக்கு சென்று பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அறிவுறுத்தினர். இரவு 7 மணி வரை பரபரப்பு நிலவியது. வேளச்சேரி: தரமணி, பெசன்ட் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பிற்பகல் நில அதிர்வு உணரப்பட்டது. அடுக்குமாடியில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர்.

பெசன்ட் நகர் எலியட் பீச்சில் குவிந்த மக்களை போலீசார் எச்சரித்து விரட்டினர். தரமணி பகுதியை ஒட்டியுள்ள அனைத்து தொழில்நுட்ப கம்பெனிகளுக்கும் நேற்று பிற்பகல் விடுமுறை அளிக்கப்பட்டது. துரைப்பாக்கம்: நில அதிர்வு காரணமாக துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், திருவான்மியூர், நீலாங்கரை, வெட்டுவாங்கேணி உட்பட கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவ கிராமங்களில் மக்கள் அதிர்ச்சியுடன் வீடுகளை விட்டு வெளியேறினர். படகுகள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களில் அபாய மணி அடிக்கப்பட்டு அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!