Home | Enquiry | Advertisement | contact  
 
 
Untitled Document
 
 
 
நாட்டுக்கோழியை பண்ணையில் வளர்த்தால் அதிக எடையுடன் லாபம்| தமிழ் வழியில் படித்துள்ளவர்களுக்கு அரசு வேலை: அவசர சட்டம் பிறப்பிப்பு| பிரபல நடிகர் முரளி மாரடைப்பால் மரணம்
 
 
 
 
  மேம்பாலம் பணியை நிறுத்த முடியாது: ராஜா திட்டவட்டம்
 
Published on 30-Jul-2010
Tags Erode Live
 
 
ஈரோடு: ""மேம்பாலம் பணியை நிறுத்த முடியாது,'' என, எம்.எல்.ஏ., ராஜா கூறினார்.ஈரோடு மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக ஈரோடு எம்.எல்.ஏ., ராஜா பங்கேற்றார்.""தீர்மானம் முதலில் நிறைவேற்றப்படும்,'' என, மேயர் அறிவித்தார்.""கேள்வி நேரம் இல்லையா?'' என, கவுன்சிலர்கள் கேட்டனர்.""பார்வையாளர்கள் பலர் வந்துள்ளனர்; ராஜா வந்துள்ளார். அவர்களுக்கெல்லாம் வேலை இருக்கும். முதலில் தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு, பிறகு கேள்வி நேரத்தை வைத்துக்கொள்ளலாம்,'' என்றார் மேயர்.கவுன்சிலர் ராதாமணி பாரதி, ""பாதாள சாக்கடைக்கு பயன்படுத்தப்படும் குழாய் சிறியதாக உள்ளது. அதில், பாத்ரூம் கழிவு செல்ல வழியில்லை. முன்னாள் அமைச்சர் பெரியசாமி காலத்தில் கட்டப்பட்ட பாதாள மழை நீர் தொட்டி வீணாகி விட்டது. அதுபோல், பாதாள சாக்கடை திட்டமும் வீணாகும். தீர்மானத்தை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்,'' எனக் கூறி, வாசற்படி வரை சென்று விட்டு, மீண்டும் வந்தார்.

மேயர்: பாதாள சாக்கடை திட்டம் பல பொறியாளர்களை கொண்டு ஆய்வு செய்த பிறகே கட்டப்படுகிறது. 40 ஆண்டுக்கு கணக்கில் கொண்டுதான் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.முருகன்: மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் குறையாது. மேம்பாலம் தேவையா? என பரிசீலனை செய்ய வேண்டும்.ராஜா: ஈரோடு நகரில் 10 ஆண்டுக்கு பிறகு போக்குவரத்து நெரிசல் எவ்வாறு இருக்கும் என்பதை கணக்கிட்டு, மேம்பாலம் கட்டப்படுகிறது. மேம்பாலம் கட்டுவதால் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சிறிதும் பாதிப்பு வராது. மேம்பாலம் குறித்து கவுன்சிலர்களுக்கு சரியான விளக்கம் இல்லை போல் தெரிகிறது. மேயர், அதிகாரிகள், கவுன்சிலர்கள் கொண்ட ஒரு கூட்டத்தை நடத்தலாம். கூட்டத்தில் கேட்கப்படும் கருத்துகளை மக்களிடம் தெரிவியுங்கள்.இக்கோரிக்கை பற்றி மேலும் சில கவுன்சிலர்கள் பேச வந்தனர்.""இதுபற்றியே பேச வேண்டாம். தனியாக கூட்டம் நடத்தலாம்,'' என ராஜா, அவர்களை கட்டுப்படுத்தினார்.பெரியமாரியம்மன் கோவில் இயக்கத்தினருக்கு பதிலளித்து ராஜா பேசியதாவது:ஈரோடு 80 அடி அகல சாலை 60 நாட்கள் கழித்து கட்டாயம் திறக்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்படுகிறது. இன்னும் ஓராண்டில் மேம்பாலத்தின் பயனை நீங்களே தெரிந்து கொள்வீர்கள். மேம்பாலம் பணியை நிறுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.இயக்கத்தை சேர்ந்த ஒருவர், ""மேயர் சிரித்துக்கொண்டே பதில் சொல்கிறார்,'' என்றார்.ஆத்திரமடைந்த ராஜா, ""சிரிக்காமல்; அழுது கொண்டே பதில் சொல்ல முடியுமா?'' என்றார் கோபமாக.நிலமீட்பு இயக்கத்தை சேர்ந்த பெண் ஒருவரை, பெண் கவுன்சிலர் ஒருவர் திட்டினார். மற்ற பெண்கள், அந்த கவுன்சிலரை தேடினர். அதற்குள், மாநகராட்சியின் பின்வாசல் வழியாக கவுன்சிலர் தப்பிவிட்டார்.

மேலும்
எஸ்.எஸ்.எல்.ஸி., சான்று வழங்கல்
முத்துசாமியை வரவேற்க கட்சியினர்க்கு ராஜா அழைப்பு
கட்டுமான தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
துல்லிய பண்ணை திட்டத்தில் கரும்பு அதிக மகசூல் ஹெக்டேருக்கு 150 மெட்ரிக் டன் அறுவடை
ஈரோட்டில் முத்துச்சாமிக்கு வரவேற்பு
  வாசகர்களின் கருத்து
பதிவு செய்தவர்: zxc
பதிவு செய்தது: dasd
asd  
பதிவு செய்தவர்: zxc
பதிவு செய்தது: dasd
asd  
கருத்தை எழுதுங்கள்

* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.
   
பெயர் :      
கருத்து :   
Erode Live
 
 
 
 
 
 
 
 
 
Untitled Document
 
No Of Viewers 14590  
 
  செய்திகள்  |   விளையாட்டு  |  பொழுதுபோக்கு  |  ஆன்மீகம்  | சினிமா   |  இலக்கியம்   |  மரு‌த்துவ‌ம்  |  நாடும்   |  ௨லகம்  |  மாவட்டம்  |  சிரி  
       
    Copyright - 2008  ERODE LIVE