1,10,19,28
இந்த வாரம் பல விஷயங்களைப் பற்றி தங்களின் சிந்தனைகள், கவலைகள் கூடுதலாக இருக்கும். அதே நேரத்தில் தாங்கள் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு பணிகளையும் மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். அவ்வப்போது ஏற்படும் டென்ஷன் மற்றும் அவசரங்களை மற்றும் தவிர்த்துக் கொள்ளுங்கள். பொது நலப்பணியில் ஈடுபடும்போது சில விமர்சனங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கும். பெரிதுபடுத்திக் கொள்ளாதீர்கள். அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்புகள் செலவுகள் ஏற்படுத்திய போதும் தங்களின் காரியங்களை செய்து கொள்ள உதவும். நிதி விவகாரங்களில் ஓரளவுக்கு எதிர்பார்த்த வரவு உண்டு என்பதால் பற்றாக்குறை ஏற்படாது. கடன் நிலவரத்தையும் கணக்கில் கொள்வது நல்லது. குடும்பத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம். தொழில் நிலையில், புதிய முயற்சியை மேற்கொள்வது சிறப்பு. வியாபாரம், விட்டுப்போன தொடர்புகள், மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, பணிகளை கவனத்துடன் மேற்கொள்ளவேண்டும்.
பணம் வரும் தேதிகள்:
5, 9.
பயனுள்ள எண்கள்:
3, 6.
2,11,20,29
இந்த வாரம் தங்களின் நினைப்புக்கு மாறான செயல்பாடுகள் சற்று கூடுதலாக இருக்கும். இருப்பினும், தங்களின் யோசித்த நடவடிக்கைகள் வீண் செலவுகளை தவிர்க்க உதவும். முக்கிய நபர்களின் சந்திப்புகள் மனநிறைவு தரும். புதிய தொழில் முதலீடுகளில் கூடுதல் கவனம் நல்லது. அரசாங்க சம்பந்தப்பட்ட பணிகளில் முறையான செயல்பாடுகளை மட்டும் கொண்டு செல்லுதல் நல்லது. சில பொறுப்புகள் தங்களை நேரடி வரும். அதிலும் நிதானத்தை மேற்கொள்ளுதல் நற்பெயரை தக்க வைத்துக் கொள்ள உதவும். வெளிவிவகாரங்கள் ஓரளவுக்கு சாதகமான சூழ்நிலை தான். அதே நேரத்தில் உடல்நிலையிலும் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். பித்தம் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படலாம். நிதி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் முன்னேற்றம் உண்டு. தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். குடும்பத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம். தொழில் நிலையில் சுமாரான வாரமே, வியாபாரம்,புதிய யுக்திகளால் விற்பனையை கூடுதல் ஆக்குவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய நபர்களின் சந்திப்பு அவ்வளவு பிரயோஜனமாக இருக்காது கவனம். வெளியூர் பிரயாணங்களில் கூடுதல் கவனம் நல்லது.
பணம் வரும் தேதிகள்:
4, 7.
பயனுள்ள எண்கள்:
2, 7.
3,12,21,30
இந்த வாரம் தங்கள் மனதில் தேவையற்ற குழப்பங்களும், பயங்களும் சகஜம் என்ற போதும், பெரிய பாதிப்பென்று எதுவும் இருக்காது. எதிலும் ஒரு திட்டத்தோடு செயல்படுங்கள். தொழில் நிலையில் முக்கிய முடிவுகள் எடுக்கக் கூடிய கால கட்டமே. அரசாங்கம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கள். உடல் நிலையில் ஆரோக்கியம் கூடும். நிதி நிலையில் வரவுகள் வந்த போதும். பற்றாக்குறை இருக்கத்தான் செய்யும். கடன் கவலை தராது. வழக்கு விவகாரங்களில் நம்பிக்கை கூடும், குடும்பத்தில் அமைதி சந்தோஷம் கூடும். குழந்தைகள் வளர்ச்சியில் கூடுதல் அக்கறை இருக்கட்டும். உடன்பிறப்புக்களால் சில உதவிகள் பயனுள்ளதாக இருக்கும். தொழில்நிலையில் தொடர்புகளை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் லாபம் கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் உத்தரவுகளை புரிந்து செயல்படுங்கள். கலைஞர்களுக்கு திறமைக்கு தகுந்த வெகுமதியும் பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள்.
பணம் வரும் தேதிகள்:
5, 10.
பயனுள்ள எண்கள்:
1, 3.
4,13,22,31
இந்த வாரம் தாங்கள் மனத்தில் உற்சாகத்துடன் சுறுசுறுப்பாகவும் காணப்படுவீர்கள். தங்களின் பொறுப்பான செயல்பாடுகள் பிறரால் பெரிதும் பாராட்டப்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி சற்று தாமதப்படும். தொழில் சார்ந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் லாபத்தை கூடுதலாக்க உதவும். கமிஷன், காண்ட்ராக்ட் தொழில் புரிபவர்களுக்கு சற்று கூடுதலான செலவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பண விவகாரங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கடன் தொந்தரவும் கொஞ்சம் குறையும். குடும்பத்தில் பெற்றோர்களால் மருத்துவச் செலவு ஏற்படலாம். உடன்பிறப்புகளில் விவகாரங்களில் தலையீடுகளை குறைத்துக் கொள்வது நல்லதுங்க. பிள்ளைகளின் போக்கில் கவலை தரலாம். தொழில் நிலையில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் கூடுதலாகும். வியாபாரம் போட்டிகள் கொஞ்சம் அதிகம். எனினும், விற்பனை பாதிக்காது. உத்தியோகஸ்தர்களுக்கு எழுத்து வகையில் தடுமாற்றம் ஏற்படலாம். கவனம், கலைஞர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்போடு செயல்படும் காரியங்களில் ஏமாற்றம் ஏற்படலாம்.
பணம் வரும் தேதிகள்:
4, 5.
பயனுள்ள எண்கள்:
4, 8.
5,14,23
இந்த வாரம் சாதிக்க வேண்டும், சாதனை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மனதில் மேலோங்கி நிற்கும். இருப்பினும் சிறு சிறு பிரச்னைகளுக்கு எல்லாம் அதிக குழப்பம் அடைவீர்கள். எல்லாம் தீரக்கூடிய, தாங்கள் தீர்க்கக் கூடிய பிரச்னைகள் தான் என்பதை மறந்து விடாதீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மிகவும் உதவியாகவும் ஆதரவாகவும் இருப்பர். புதிய முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகள் இருப்பினும் எடுத்துக் கொள்ளுதல் சிறப்பு. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் வரவுகள் தாராளமாக இருப்பினும் செலவு சம்பந்தப்பட்டதில் கவனத்தோடு செயல்படுவது நல்லது. கடன் நிலவரங்களில் கவனம் கொள்ளுதல் தேவையற்ற மன அழுத்தத்தை குறைக்க உதவும். குடும்பத்தில் கொஞ்சம் மருத்துவச் செலவுகள் அதிகமாக இருக்கலாம். பெற்றோர்களின் உடல்நிலையிலும் கூடுதல் அக்கறை தேவைப்படலாம். தொழில் நிலையில் சிற்சில பிரச்னைகள் ஏற்பட்டு மறையும், வியாபாரம், விற்பனை கூட வாய்ப்பு உண்டு உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் அதிருப்திக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கலைஞர்களுக்கு சிறப்புகள் கூடும்.
பணம் வரும் தேதிகள்:
8, 7.
பயனுள்ள எண்கள்:
2, 5.
6,15,24
இந்த வாரம் நல்ல நல்ல சிந்தனைகள் தங்கள் மனதில் தோன்றிய போதும் கூடவே ஏற்படும் சந்தேகங்களால் எதையும் சரிவர செயல்படுத்த முடியாமல் போகும். எனினும் அறிவுபூர்வமான சிந்தனைகளும், செயல்பாடுகளும் நல்லது. அரசியல்வாதிகளின் மூலம் சில முக்கிய காரியங்களை முடிக்க முயற்சிப்பீர்கள். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்கி விடாதீர்கள். சம நிலையோடு செயல்படுங்கள். உடல்நிலையில் மருத்துவரின் ஆலோசனை அவசியமாகும். பண விவகாரங்களில் என்ன தான் கணக்கு போட்டாலும் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படத்தான் செய்யும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். எனினும், தொந்தரவு இல்லை என்று கூறுவதற்கில்லை. பிள்ளைகளின் வளர்ச்சியில் கூடுதல் கவனம் நல்லது. உறவுகளுக்காக சில பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் முடிந்த அளவிற்கு தவிர்த்துக்கொள்ள முயற்சியுங்கள். தொழில் நிலையில் மாற்றங்கள் உகந்த காலம். வியாபாரம் என்ன தான் தெளிவுபடுத்தினாலும் இழுபறி நிலையே. உத்தியோகஸ்தர்களுக்கு மாற்றங்களை எதிர்பார்க்கலாம். கலைஞர்களுக்கு, அந்நிய நபர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.
பணம் வரும் தேதிகள்:
6, 10.
பயனுள்ள எண்கள்:
6, 9.
7,16,25
இந்த வாரம் மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் கூடுதலாகும். அதே நேரத்தில் என்ன தான் மிகத்தெளிவாக திட்டமிட்ட போதும், அவசரமும், நெருக்கடிகளும் தவிர்க்க முடியாததாக இருக்கும். வீட்டிலும் வெளியிடங்களிலும் வார்த்தைகளை கவனமாக கையாளுதல் வீண் சச்சரவுகளை தவிர்க்க உதவும். புதிய புதிய தொழில் முயற்சிகளில் கவனமான செயல்பாடுகள் நிர்ணயித்த இலக்கை எட்ட உதவும். அரசாங்க சம்பந்தப்பட்ட பணிகளை உரிய காலத்திற்குள் செய்து முடிக்க முயற்சியுங்கள். உடல் நிலையில் ஆரோக்கியத்திற்கு குறைவில்லை என்ற போதும் நார்மலான மருத்துவ பரிசோதனை தேவையானதாக இருக்கும். நிதி விவகாரங்களில் சாதகமான சூழ்நிலை. எனினும் திட்டமிட்ட செலவுகளை மேற்கொள்வது நல்லது. கடன்களிலும் கவனம் இருக்கட்டும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் தேவையற்ற தாமதங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் ஒரு சில விவகாரங்களில் தொல்லைகள் அதிகம் ஏற்படலாம். பிள்ளைகளின் போக்கு கவலை தரலாம். தொழில் நிலையில் முன்னேற்றத்திற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரம் சற்று மந்த நிலை நீடிக்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு, சில மாற்றங்கள், ஒரு வகையில் நல்லதாகவே இருக்கும். கலைஞர்களுக்கு, வசதி வாய்ப்புக்கள் கூடக்கூடிய வாரம்.
பணம் வரும் தேதிகள்:
7, 10.
பயனுள்ள எண்கள்:
2, 5.
8,17,26
இந்த வாரம் மனமகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சில காரியங்களை எதிர்பார்ப்பிற்கு மேலாகவே செய்து முடிப்பீர்கள். சில பொறுப்புகளுக்காக தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டியிருக்கும். புதிய அறிமுகங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தொடர்புகளில் மிக கவனம் இருக்கட்டும். உடல் நிலையில் ஆரோக்கியங்கள் கூடும். தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்ளுங்கள். சில காரணங்களுக்காக தாங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் செலவினங்கள் தங்களுடைய நிதி நிலைமை மிகவும் பாதிக்கப்படலாம். கொஞ்சம் நிதானமாக செயல்பட்டீர்களேயானால் சமாளிச்சுடலாம். குடும்பத்தில் பெரியோர்களை அனுசரித்து எந்த ஒரு முடிவினையும் எடுங்க நல்லாயிருக்கும். வெளி வட்டார பழக்க வழக்கங்களால் ஓரளவுக்கு நன்மை எதிர்பார்க்கலாம். இல்லறத் துணையின் கருத்துக்களுக்கு தகுந்த மதிப்பு கொடுத்தல் நல்லது. பிள்ளைகளால் பெருமையடைய வாய்ப்பு உண்டு. தொழில் எதிர்பார்க்கும் இலக்கை எட்டலாம். வியாபாரம் மந்த நிலை நீடிக்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பொறுப்புகளால் கொஞ்சம் சிரமம் கூடுதலாகும். கலைஞர்களுக்கு, புதிய ஒப்பந்தங்களால் வசதி வாய்ப்புக்கள் கூடும்.
பணம் வரும் தேதிகள்: 5, 8.
பயனுள்ள எண்கள்: 6, 8.
9,18,27
இந்த வாரம் நார்மலான பணிகள் தான் என்றபோதும் சில காரியங்களை மிக எளிதாக முடித்த சந்தோஷம் கூடுதலாக இருக்கும். நண்பர்களுக்காகவோ அல்லது உறவினர்களுக்காகவோ மேற்கொள்ளும் பணிகள் தங்களின் பணிகளை பாதிக்காத வண்ணம் அமைத்துக் கொள்ளுங்கள். தொழில் தொடர்பான ஒப்பந்தங்களில் தெளிவான வரையறைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உடல் நிலையில் அவ்வப்போது சிறு சிறு தொந்தரவு; ஏற்பட்டு விலகும். நிதி நிலையில் கொஞ்சம் முன் எச்சரிக்கையான நடவடிக்கை சிரமத்தை குறைக்கும். தேவை, திட்டம் நிதானம் அவ்வளவு தான். வழக்குகளில் அலைச்சல்கள் அதிகமான போதும் சாதகமான தகவல்கள் அதிகம் இருக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் பெரிதுபடுத்தாதீர்கள். உடன்பிறப்புகளோடு சுமூகமான போக்கு நல்லது. தொழில் நிலையில், வளர்ச்சியை ஏற்படுத்த எடுக்கும் முயற்சி வெற்றி தரும். வியாபாரம் நார்மலான நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லைங்க. உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கூடும். கலைஞர்களுக்கு, சில எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தரும்.
பணம் வரும் தேதிகள்:
4, 7.
பயனுள்ள எண்கள்:
6, 9. |