திமுகவில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பா.ஜ.க.வில் இணைய போவதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், இதுகுறித்து தனது டுவிட்டர் இணையதள பக்கத்தில் அவர் கூறியதாவது:-
தி.மு.க.வில் இருக்கும் வரை நான் சிறப்பாக பணியாற்றியுள்ளேன். இப்போது எனது மகள்கள் தான் எனக்கு உலகம். தி.மு.க. தலைவர் கலைஞர் மீது, என் வாழ்க்கை முழுவதும் மிகுந்த மரியாதை வைத்திருப்பேன். தலைவர் போல் அல்லாமல் எனக்கு தந்தையாகவே அவர் இருந்தார். அந்த உணர்வை யாரும் எடுத்து செல்ல முடியாது.
சில நேரங்களில் கஷ்டமான முடிவுகளையும் புன்சிரிப்போடு ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் அதைத்தான் தற்போது செய்துள்ளேன். எனக்கு உணர்ச்சிகரமான நேரம் இது. கொஞ்சநாள் குடும்பத்தோடு தனியாக இருக்க விரும்புகிறேன். எனவே பத்திரிகையாளர்கள் யாரும் என்னை சில நாட்கள் தொடர்பு கொள்ள வேண்டாம்.
நான் எந்த கட்சியிலும் சேரவில்லை. அது குறித்த யூகங்களை விட்டுவிடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
|