நைஜீரியாவில் நேற்று மேலும் 2 கிறிஸ்தவ தேவாலயங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதற்கிடையே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள பவுச்சி நகரில் உள்ள 2 கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன.இதுகுறித்து, அப்பகுதியில் வசிக்கும் கர்பி அலி என்பவர் கூறுகையில், Ôரயில் பாதையை ஒட்டி உள்ள ஒரு தேவாலயத்தின் வாயிலில் அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் நுழைவாயில் சேதமடைந்தது. சிறிது நேரத்தில் படமா என்ற இடத்தில் உள்ள மற்றொரு தேவாலயத்தில் குண்டு வெடித்தது. இதில் அந்த ஆலயம் முற்றிலும் இடிந்து தரைமட்டமானதுÕ என்றார்.
|