இராக்கில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போர் எதிரொலியாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.69-ம், டீசல் விலை 50 காசுகளும் உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வு திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் திங்கள்கிழமை கூறுகையில், "மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 4 அமெரிக்க டாலர்கள் அதிகரித்ததோடு,இந்திய ருபாயின் மதிப்பில் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. எனவே நஷ்டத்தை ஈடுகட்ட பெட்ரோல் விலையில் ரூ.1.69 உயர்த்தப்பட்டுள்ளது' என்று தெரிவித்தது.மேலும், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டும்வகையில் மாதந்தோறும் டீசல் விலையை அதிகரிப்பது என்று முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவின்படி, தற்போது டீசல் விலை 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
|