இராக்கில் சிக்கியுள்ள 46 இந்திய செவிலியர்களை மீட்பதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திக்ரித் மருத்துவமனையில் இருந்த அவர்கள் 46 பேரையும் வியாழக்கிழமை வலுக்கட்டாயமாக தீவிரவாதிகள் ரகசிய இடத்துக்கு மாற்றியுள்ளனர். அப்போது கண்ணாடி உடைந்த சம்பவத்தில், 5 இந்திய செவிலியர்கள் காயமடைந்துள்ளனர்.இராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித் நகரில் இருக்கும் மருத்துவமனையில், இந்தியாவைச் சேர்ந்த செவிலியர்கள் 46 பேர் பணியாற்றி வந்தனர்.அண்மையில் அந்த நகரை ஐ.எஸ்.ஐ.எல். இயக்க தீவிரவாதிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து மருத்துவமனையில் பணியாற்றிய இந்திய செவிலியர்கள் அங்கேயே சிக்கிக் கொண்டனர்.இதனைத் தொடர்ந்து, அவர்கள் 46 பேரையும் பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வந்தது.இந்நிலையில், திக்ரித் மருத்துவமனையில் இருந்த அவர்களை தீவிரவாதிகள், வலுக்கட்டாயமாக ரகசிய இடத்துக்கு மாற்றியுள்ளனர். திக்ரித்தில் இருந்து வாகனம் ஒன்றில் 46 பேரையும் வலுக்கட்டாயமாக ஏற்றி, சாலை மார்க்கமாக தீவிரவாதிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.இராக்கில் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு பத்திரிகையாளர்களோ அல்லது தன்னார்வ மற்றும் தொண்டு அமைப்பினரோ செல்ல இயலாது. இதனால் 46 இந்திய செவிலியர்களையும் தீவிரவாதிகள் எங்கு கொண்டு சென்றுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், "திக்ரித்தில் இருந்து சாலை மார்க்கமாக இந்திய செவிலியர்களை தீவிரவாதிகள் அழைத்துச் சென்றது உண்மைதான். செவிலியர்களின் சொந்த பாதுகாப்புக்காகவே அழைத்து செல்லப்படுவதாக தெரிகிறது.செவிலியர்கள் இருக்கும் பகுதி, தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆதலால் நமது அரசால் இந்த விவகாரத்தில் எதுவும் செய்ய இயலாது. தன்னார்வ அமைப்புகளாலும் இந்திய செவிலியர்கள் இருக்கும் பகுதிக்கு செல்ல முடியாது.இதுதொடர்பாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் பிற அமைப்பினருடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. தீவிரவாதிகள் சொல்வதை கேட்குமாறு செவிலியர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.அதேசமயம், திக்ரித்தில் இருந்த இந்திய செவிலியர்களை யாருடைய வேண்டுகோளின்படி தீவிரவாதிகள் வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்துள்ளனர்? என்று அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் நேரடியாக பதிலளிக்கவில்லை. இதுதொடர்பாக அவர் கூறுகையில், "வேறு பகுதிக்கு இந்திய செவிலியர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ள போதிலும், அவர்களுடன் இராக்கில் உள்ள நமது தூதரகம் தொடர்பில் உள்ளது. 46 இந்திய செவிலியர்களும் பாதுகாப்பாக உள்ளனர். கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவத்தில், சில செவிலியர்கள் லேசான காயமடைந்துள்ளனர்.இதேபோல், மேலும் 39 இந்தியர்களும் சண்டை நடைபெறும் பகுதியில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கும் எந்த ஆபத்தும் இல்லை. அவர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். இராக்கில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் இந்தியா மட்டும் தனித்து ஈடுபடவில்லை. இந்த விவகாரத்தில் இராக்கிற்கு உள்ளேயும், இராக்கிற்கு வெளியேயும் இந்தியாவுக்கு நண்பர்கள் உள்ளனர்' என்று தெரிவித்தார்.உறவினர்கள் கவலை: திக்ரித் மருத்துவமனையில் பணியாற்றிய இந்திய செவிலியர்களில் பெரும்பாலானோர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆதலால் இந்தச் செய்தி வெளியானதும், கேரளத்தில் இருக்கும் அவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.கோட்டயத்தில் இருக்கும் செவிலியர் ஒருவரின் தந்தை தெரிவிக்கையில், "எனது மகள் வியாழக்கிழமை பிற்பகல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தாங்கள் அனைவரும் தீவிரவாதிகளால் வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாக தெரிவித்தார்.அப்போது செவிலியர்களிடம், பாதுகாப்புக்காகவே வேறு இடத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதாக தீவிரவாதிகள் தெரிவித்தனர் என்று எனது மகள் கூறினார்' என்று தெரிவித்தார்.1,000 இந்தியர்களுக்கு விமான டிக்கெட்: இதனிடையே, இராக்கில் இருந்து வெளியேற விரும்பி அங்குள்ள 1,500 இந்தியர்கள் வெளியுறவு அமைச்சகத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 1,000 பேருக்கு விமான டிக்கெட்டுகளை வெளியுறவு அமைச்சகம் வழங்கியுள்ளது.எர்பில் நகரில் இருக்கும் இந்தியர்களும், அங்கிருந்து வெளியேற விரும்பி வெளியுறவு அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளனர். 46 பேரில் தூத்துக்குடி செவிலியரும் ஒருவர்திக்ரித்தில் இருந்து தீவிரவாதிகளால் வலுக்கட்டாயமாக ரகசிய இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள இந்திய செவிலியர்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த செவிலியரும் ஒருவர் ஆவார்.லெசிமா ஜெரோஸ் மோனிஷா என்ற அவர், தூத்துக்குடியில் இருக்கும் தனது த
|