நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘தலைவா‘ படம் தமிழ்நாட்டில் இன்னும் வெளிவரவில்லை. அதற்குள் திருட்டு சிடியை தயாரித்தாலோ விற்றாலோ உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள். முதல்வர், என்.எல்.சி பிரச்னை, காவிரி பிரச்னை, அம்மா உணவகம், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி என எத்தனையோ நல்ல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார்.
இந்தியாவில் தமிழகத்தை முதல் மாநிலமாக உயர்த்த வேண்டும் என்று கடினமாக உழைத்து வருகிறார். அவரது வெளி ப்படையான செயல்பாடுகளும் அணுகுமுறையும் எனக்கு எப்போதும் பிடிக்கும். எல்லோருக்கும் நல்லது செய்யும் நமது முதல்வர், ‘தலைவா’ பிரச்னையிலும் தலையிட்டு விரைவில் படம் வெளிவர ஆவண செய்வார். அதுவரை என்னை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகரும் பொறுமையோடு காத்திருக்குமாறு கேட்டுக்கொள் கிறேன். இவ்வாறு நடிகர் விஜய் கூறியுள் ளார்.
|