Menu Left Menu Right
ஈரோடு செய்திகள்
டிஜிட்டல் நூலகத்தில் சேவைக்குறைபாடு
Default

ஈரோடு: ஈரோடு சம்பத் நகரில் உள்ள டிஜிட்டல் நூலகத்தில், சேவைக்குறைபாடு குறித்து, ஆர்.டி.ஓ., நேரில் விசாரணை செய்தார்.
ஈரோடு கலெக்டராக கார்த்திகேயன் இருந்தபோது, ஈரோடு சம்பத் நகரில் டிஜிட்டல் நூலகம் அமைக்க முயற்சி மேற்கொண்டார். அப்போது, தமிழக அரசு, ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரியில் டிஜிட்டல் நூலகம் அமைக்க உத்தரவிட்டது. இதன்படி, ஈரோடு சம்பத் நகரில், வீட்டுவசதி வாரியம் சார்பில் பிரதான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கலெக்டர் கார்த்திகேயன், 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார். தவிர, அரசு சார்பில், 1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்தொகையில் மிகவும் நவீனமாக, நூலகம் அமைக்கப்பட்டது.
கடந்த, 2013, மே, 26ம் தேதி, தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்நூலகத்தை திறந்து வைத்தார். மாவட்ட நூலகத்தில் இருந்து, 30 ஆயிரம் புத்தகங்கள், இந்நூலகத்துக்கு வழங்கப்பட்டது. இங்கு, ஆண்களுக்கு, ஐந்து, பெண்களுக்கு, ஐந்து என, பத்து கம்ப்யூட்டர்கள் வைக்கப்பட்டு, இணைய தள வசதி செய்யப்பட்டு, நூலக உறுப்பினர்கள் பிரவுசிங் செய்ய, ஒரு மணி நேரத்துக்கு, பத்து ரூபாயும், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு, 20 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
இந்நூலகம், காலை, எட்டு முதல் இரவு, எட்டு மணி வரை செயல்பட வேண்டும். சமீப காலமாக, இந்நூலகம் காலை, ஒன்பது மணிக்கு மேல் திறக்கப்படுவதும், எட்டு மணிக்குள் பூட்டப்படுவதும், பிரவுசிங் செய்ய வருவோரை அனுமதிப்பதில்லை என்றும், குழந்தைகள் போன்றோர்கள் கேம்ஸ் விளையாட மட்டுமே அனுமதிப்பதாகவும், நூலகத்தில் உள்ள பிற பிரிவுகள் முறையாக செயல்படவில்லை, என குற்றச்சாட்டு எழுந்தது. இங்கு பணி செய்வோரில் பெரும்பாலானவர்கள், தற்காலிக பணியாளர் என்பதால், நூலகம் குறித்த பணிகள் முழுமையாக தெரியாமல், நூலகத்துக்கு வருவோர் அதிருப்தி அடைந்தனர். கலெக்டர் சண்முகம் உத்தரவுப்படி, ஆர்.ஓ.டி., (பொறுப்பு) உதவி இயக்குனர் (கலால்) ஸ்டெல்லாராணி, நேற்று நேரில் வந்து விசாரித்தார்.
விசாரணையில்போது, சரியான நேரத்தில் நூலகம் திறக்கப்படுவதில்லை. பிரவுசிங் செய்ய வருவோரை, ஜெராக்ஸ் போன்றவைகளுக்காக வருவோர் முறையாக அனுமதிப்பதில்லை. முறையாக ரசீது வழங்கவில்லை, என தெரியவந்தது.இந்நூலக பயன்பாட்டுக்கு, புதிதாக வந்துள்ள, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள், பண்டல் கூட பிரிக்கப்படாமல், பயன்பாடற்று இருந்தன. டி.என்.பி.எஸ்.சி., மற்றும் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு படிக்க வருவோருக்காக தனியாக ஒதுக்கப்பட்ட அறைகள் பூட்டியே கிடந்தன. அதற்கான புத்தகங்கள் கூட தருவிக்கப்படவில்லை. முதல் தளத்தில், படிப்பதற்கான மிகப்பெரிய அறை, புத்தகங்கள் இன்றி பூட்டிக்கிடந்தது. தவிர, நவீன நூலகம் என்ற தலைப்புக்கு ஏற்ப, இங்கு வைக்கப்பட வேண்டிய சி.டி.,க்கள் டி.வி.டி.,க்கள் போன்றவை, இதுவரை வாங்கப்படவில்லை, என்பது தெரியவந்தது.இந்நூலகம் என்ன நோக்கத்துக்காக திறக்கப்பட்டதோ, அந்த செயல்பாட்டில் இல்லாதது தெரியவந்தது."போதிய ஆட்கள் இன்றி, புத்தகங்களை அடுக்குதல், கூடுதல் நேரம் செயல்படுதல் உட்பட பிற பணிகளை செய்ய முடியவில்லை,' என, பணியாளர்கள் தெரிவித்தார்.""சரியான நேரத்தில் நூலகம் செயல்பட வேண்டும். உறுப்பினர்கள், வாடிக்கையாளர்கள் தேவைகளை செய்து கொடுக்க வேண்டும். சேவை நோக்குடன் பணி செய்ய வேண்டும்,'' என ஆர்.டி.ஓ., எச்சரித்தார். இந்த சோதனை குறித்து, கலெக்டரிடம், ஆர்.டி.ஓ., அறிக்கை தாக்கல் செய்தபின், நடவடிக்கைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!