Menu Left Menu Right
ஈரோடு செய்திகள்
சென்னிமலை, கொடுமுடியில் இன்று கும்பாபிஷேகம்
Default



ஈரோடு: சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பல கோடியில் திருப்பணிகள் முடிந்து, இன்று, 9.45 முதல், 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, மூலவர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மலைக்கோவிலின் அடிவாரத்தில், பிரமாண்டமாக அன்னதானம் வழங்கப்படுகிறது.இன்று மாலை, 6 மணிக்கு, வள்ளி, தெய்வானை சமேத முத்துகுமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.* கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில், இன்று காலை, 9.15 முதல், 10.15 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை, நான்கு மணிக்கு சுவாமி-அம்பாள், பெருமாள்-தாயார் திருக்கல்யாண விழா நடக்கிறது.இக்கோவிலிலும், அன்னதானம் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னிமலை கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று, ஈரோடு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!