Menu Left Menu Right
ஈரோடு செய்திகள்
அந்தியூர் மின்இணைப்பு பெயர் மாற்ற முகாம்
Default



அந்தியூரில் மின்இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம் ஜூலை 9-ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து கோபி மின்பகிர்மான வட்டச் செயற்பொறியாளர் ப.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

பல தாழ்வழுத்த மின்இணைப்புகள் இப்போதைய கட்டட மற்றும் விவசாய கிணறுகளின் உரிமையாளர்களின் பெயரில் மாற்றம் செய்யப்படாமல், பழைய உரிமையாளர்களின் பெயரிலேயே இருந்து வருகிறது. அத்தகைய மின் இணைப்புகளை, இப்போதைய உரிமையாளர்களின் பெயரில் மாற்றும் வகையில் அந்தியூரில் ஜூலை 9-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதில் அந்தியூர் உபகோட்டத்தைச் சேர்ந்த மின்நுகர்வோர், அந்தியூர் வட்டம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மின்நுகர்வோர், அந்தியூர் தெற்கு பிரிவு அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் அணுகலாம்.

பெயர் மாற்ற விண்ணப்பப் படிவத்துடன் தாழ்வழுத்த ஒப்பந்த படிவம், விவசாய மின்இணைப்பாக இருந்தால், கிராம நிர்வாக அலுவலரின் சான்று, பெயர் மாற்றக்கட்டணம், விவசாய மின்இணைப்பாக இருந்தால் பட்டா, சிட்டா, அடங்கல், வரைபடம் ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

மின்இணைப்பு உரிமையாளர் இறந்திருந்தால், முந்தைய உரிமையாளரின் இறப்புச் சான்றிதழ், சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் இருந்து பெற்ற வாரிசு சான்று அல்லது மின்இணைப்பு உரிமையை நிரூபிக்கும்படியான இனங்களில் வரி கட்டிய ரசீது, இதர வாரிசுதாரர்கள் இருந்தால், அவர்களின் சம்மத கடிதம் அல்லது ரூ.80-க்கான முத்திரைதாளில் பிணையுறுதி பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!