Menu Left Menu Right
ஈரோடு செய்திகள்
காலிங்கராயன் வாய்க்காலை சீரமைக்க
Default

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பாசன வாய்க்காலாக இருப்பது காலிங்கராயன் வாய்க்கால். 740 ஆண்டுகள் பழமையான இந்த வாய்க்காலில் ஈரோடு நகரில் உள்ள சாய-தோல் பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் கலந்து மாசுப்பட்டு விட்டது. இதனால் காலிங்கராயன் பாசன நிலங்களும் வீணாகி வருகின்றன. இதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே காலிங்கராயன் வாய்க்காலை சுத்தப்படுத்த வேண்டும் என்று பல்வேறு பொது அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன.

விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று காலிங்கராயன் வாய்க்காலை சீரமைக்க ரூ.50 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் சட்டசபையில் வெளியிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து காலிங்கராயன் வாய்க்காலில் திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. காலிங்கராயன் வாய்க்காலை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு, ஏப்ரல் 30-ந் தேதி தண்ணீர் நிறுத்தப்படும்.

ஆண்டுக்கு 101/2 மாதம் தண்ணீர் திறக்கப்படும் இந்த வாய்க்கால் 11/2 மாதம் மட்டுமே தண்ணீர் நிறுத்தம் செய்யப்படும். எனவே தற்போது தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ள காலத்தில் சீரமைப்பு பணிக்கான திட்டம் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது.

தற்போது தமிழக அரசு ஒதுக்கி இருக்கும் ரூ.50 கோடியில் காலிங்கராயன் வாய்க்காலின் 3.3 கிலோ மீட்டர் முதல் 9.7 கிலோ மீட்டர் வரையில் மொத்தம் 6.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் செய்யப்படுகின்றன.

புதிய சீரமைப்பின் படி காலிங்கராயன் வாய்க்காலின் 2 கரைகளும் கான்கிரீட் சுவராக மாற்றப்படுகிறது. அதுபோல் தளமும் கான்கிரீட் போடப்படுகிறது. இதுவரை ரோடு வசதி இல்லாத வலது கரையில் ரோடு போடப்படுகிறது. இந்த ரோட்டுக்கும் வலது புறம் சாக்கடை கழிவுகள் செல்வதற்காக தனியாக ஒரு கால்வாய் அமைக்கப்படுகிறது. எனவே சாக்கடை கழிவுகள் பாசன தண்ணீரோடு கலக்காமல் கொண்டு செல்லப்படும். இந்த பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கி நிறைவேற்றப்பட உள்ளது.

அதைத்தொடர்ந்து காலிங்கராயன் வாய்க்காலில் காங்கிரீட் போடுவதற்கு மண்ணின் தரத்தை தெரிந்து கொள்வதற்காக மண் மாதிரிக்கு எடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்று பொக்லைன்இயந்திரம் வாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்டது. காலிங்கராயன் வாய்க்காலில் 500 மீட்டருக்கு ஒரு இடத்தில் மண் மாதிரிக்கு எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாதிரிக்கு எடுக்கப்பட்ட மண் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளன.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!