|
கரூரை சேர்ந்தவர் மணிகண்டன் (40). இவர் தனது குடும்பத்தினருடன் கோடை விடுமு றையை கழிப்பதற்காக ஈரோடு வழியாக மைசூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை மணிகண்டன் ஓட்ட சித்தோடு அருகே சென்று கொண்டிருதார். அப்போது சாலையின் குறுக்கே திடீரென நாய் ஒன்று ஓடியதால் திடுக்கிட்ட மணிகண்டன், நாய் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் போட்டு காரை இடதுபுறம் ஒடித்தார். இதில் நிலை தடுமாறிய கார் சாலையோரம் உள்ள ஒரு மரத்தில் மோதி நின்றது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
|