Menu Left Menu Right
ஈரோடு செய்திகள்
வெவ்வேறு விபத்தில் மூதாட்டிகள் மரணம்
Default

பவானி அருகேயுள்ள ஊராட்சிக்கோட்டை காளியப்பன் மனைவி குஞ்சம்மாள் (60). இவர் நேற்று முன்தினம் மாலை ஊராட்சிக்கோட்டை பேருந்துநிறுத்தம் அருகே மேட்டூர் சாலையைக் கடந்து சென்றபோது, அவ்வழியே சென்ற மொபட் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், படுகாயம் அடைந்த அவர் பவானி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.ஆனால் குஞ்சம்மாள் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பவானி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். இன்னொரு விபத்து:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகேயுள்ள சமயசங்கிலி மேட்டாங்காட்டுத் தோட்டத்தைத் சேர்ந்தவர் சென்னியப்பன் மகன் கார்த்தி (28). மெக்கானிக்காக உள்ள இவர், பவானி வரதநல்லூரில் உள்ள தனது பாட்டி கன்னியம்மாளை (65) பைக்கில் ஏற்றிக் கொண்டு சமயசங்கிலிக்கு அழைத்துச் சென்றார்.
மேட்டூர் சாலையில் குருப்பநாயக்கன்பாளையம் மில் அருகே சென்றபோது பவானி நோக்கிச் சென்ற வேன், பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், கன்னியம்மாளுக்கு பலத்த காயம் அடைந்து பலியானார்.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!