|
ஈரோட்டை அடுத்த, சென்னிமலை ஒட்டப்பாறை கிராமம் நாமக்கல் பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). விவசாயி. இவருடைய மகன் சுப்பிரமணி என்பவருக்கும் சென்னிமலையை அடுத்து உள்ள கருப்பணங்கோவில் பள்ளம் கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவருடைய மகள் செல்வி என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மோனிஷா என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் இறந்துபோனார்.
இளம் வயதிலேயே கணவரை இழந்த செல்வி நாமக்கல்பாளையத்திலேயே மகள் மோனிஷாவுடன் வாழ்ந்து வந்தார். ராமசாமியும், மகன் இறந்த பின்னர் மருமகள் செல்வியை அவரது தோட்டத்து வீட்டிலேயே குடியமர்த்தினார். சில ஆண்டுகளுக்கு முன்பு ராமசாமி, அவருக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்தபோது, மருமகளுக்கு சேரவேண்டிய பணத்தையும் கொடுத்து உள்ளார்.
இப்படி மருமகள் செல்வி, பேத்தி மோனிஷா ஆகியோர் தோட்டத்து வீட்டிலும், மாமனார் ராமசாமியும் அவருடைய மனைவி பாப்பாத்தியும் கிராமத்தில் வேறு ஒரு வீட்டிலும் தனித்தனியாக வசித்து வந்தனர். மோனிஷா அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பில் படித்து வந்தார்.
இந்தநிலையில் தனியாக வாழ்ந்து வந்த செல்விக்கு அந்த பகுதியில் உள்ள ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இந்த தகவல் ராமசாமியின் காதுகளுக்கு எட்டியதும் அவர் வருத்தம் அடைந்தார். குடும்ப மானம் போகிறதே! என்று கவலைப்பட்ட அவர் மருமகள் செல்வியிடம் "தகாத உறவு வேண்டாம்" என்று எச்சரித்தார்.
ஆனால், செல்வி, மாமனாரின் அறிவுரையை ஏற்கவில்லை. மேலும், அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டி அனுப்பினார். இது ராமசாமிக்கு பெரும் வருத்தத்தை கொடுத்தது. ஆனால் தொடர்ந்து செல்வி குறித்த தகவல்கள் அவரது காதுகளுக்கு எட்டியபோது மருமகள் மீது ஆத்திரமாக வந்தது. சமீபத்தில் பள்ளிக்கூட விடுமுறை வந்ததால், செல்வி அவருடைய மகள் மோனிஷாவை, உறவினர் வீட்டில் கொண்டு விட்டுள்ளார்.
செல்வியின் தகாத உறவு குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறியதால் ராமசாமி தீராத ஆத்திரம் கொண்டார். நேற்று முன்தினம் இதுபற்றி செல்வியின் பெற்றோரிடமே அவர் புலம்பி இருக்கிறார். ஆனால், செல்வி இதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை.
செல்வியிடம் கள்ளத்தொடர்பை கைவிட்டுவிடும்படி வலியுறுத்தினார். மாமனாரின் அறிவுரையை அவர் கண்டுகொள்ளவில்லை. மேலும் ராமசாமிக்கு ஆத்திரம் ஏற்படுத்தும் வகையில், கள்ளத்தொடர்பு வைத்து இருப்பவரையே இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக செல்வி கூறினார். இது ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த ராமசாமிக்கு பெரும் கவலையாகவும், வேதனையாகவும் இருந்தது. இப்படியே விட்டால், செல்வியால் தனது குடும்ப மானமே போய்விடும் என்று நினைத்தார்.
இனியும் செல்வியை உயிரோடு விட்டுவைத்தால் தனது குடும்பத்தின் மானத்தை காப்பாற்றமுடியாமல் போய்விடும் என்று நினைத்த ராமசாமி மருமகளை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக ஒரு அரிவாளை வாங்கி தயார்செய்தார். நேற்று அதிகாலை நேரத்திலேயே தோட்டத்து வீட்டுக்கு சென்று செல்வியின் வீட்டை சுற்றிச்சுற்றி வந்தார். வழக்கம்போல செல்வி பாத்திரங்கள் கழுவுவதற்காக வெளியே வந்தார்.
உடனடியாக செல்வியை கொலை செய்து விட முடிவு செய்தார். ஒரே வெட்டில் செல்வியை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக, அங்குள்ள ஒரு மரத்தின் கிளையை ஓங்கி வெட்டினார். ஒரே வெட்டில் கிளை துண்டானதும், அதே வேகத்தில் செல்வியின் அருகில் வந்த ராமசாமி, செல்வியின் கழுத்தில் ஓங்கி வெட்டினார். ஒரே வெட்டில் தலை வெட்டுப்பட்டு, ரத்த வெள்ளத்தில் செல்வி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து செத்தார்.
அடுத்து என்ன செய்வது என்று யோசித்த ராமசாமி, மருமகளின் உடலை எரித்து விட தீர்மானித்தார். வீட்டின் அருகிலேயே இருந்த சோளத்தட்டை போருக்குள் செல்வியின் உடலை கொண்டு செல்வதற்காக உடலை இழுத்தார். அவரால் கொலை செய்யப்பட்ட செல்வியின் உடலை தூக்கவோ, இழுக் கவோ முடியவில்லை. எனவே உடலை துண்டுத்துண்டாக வெட்டி சோளத்தட்டை போரில் போட முடிவு செய்தார். அதற்காக அங்கு கிடந்த ஒரு மரக்கட்டையை எடுத்து வந்து அதில், செல்வியின் உடலை வைத்து, தலையை துண்டாக வெட்டி எடுத்தார். அதுபோல் 2 கைகள், 2 கால்களையும் துண்டு துண்டாக வெட்டி எடுத்தார். அதன்பிறகும் அவரால் தலை துண்டிக்கப்பட்ட முண்டத்தை தூக்க முடியவில்லை. எனவே சாவகாசமாக ஒரு கயிற்றை எடுத்து வந்து முண்டத்தை கட்டி இழுத்துச்சென்று சோளத்தட்டை போரின் அருகில் கொண்டு போட்டார். அதற்கு மேல் அவரால் தூக்க முடியாததால் சோளத்தட்டையை எடுத்து முண்டத்தின் மீது போட்டு தீயைப்பற்றவைத்தார். அப்போது நேரம் நன்றாக விடிந்து இருந்தது. திடீரென்று செல்வியின் வீட்டின் அருகே சோளத்தட்டை தீப்பிடித்து எரிந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீ விபத்து என்று நினைத்து ஓடி வந்தனர். அங்கு வந்து பார்த
|