|
ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை சார்பாக, ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 12 நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.
ஒவ்வொரு நாளும் மாலையில் இலக்கிய நிகழ்ச்சிகள், கவியரங்கம் நடைபெறும். இந்திய அளவில் உள்ள பதிப்பாளர்கள் தங்களது பதிப்புகளை இந்த கண்காட்சியில் வைப்பார்கள்.
ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், க்ரூர் போன்ற மேற்கு மண்டல மாவட்டங்கிளில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் கடந்த 7 ஆண்டுகளாக இந்த புத்தகத் திருவிழா வரவேற்பை பெற்றுள்ளது.
தொடர்ந்து இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி, 8வது ஆண்டாக புத்தக திருவிழா நடப்பதாக மக்கள் சிந்தனை பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
|