Menu Left Menu Right
மருத்துவம்
பீப் சாப்டுறவங்களா நீங்க முதல்ல இத படிங்க
Default

சிகப்பு இறைச்சி எனப்படும் மாட்டிறைச்சியை சாப்பிட்டால் இளவயதில் மரணத்தை தழுவ நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலை நாடுகளில் பன்றியின் இறைச்சி பொதுவாக வெள்ளைக் கறியாகக் கருதப்படுகிறது. மாறாக மாட்டிறைச்சி சிவப்புக் கறியாகக் கருதப்படுகிறது. மையோக்ளோபின் என்ற இந்த புரோட்டீனே இதற்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது.

பன்றி இறைச்சியில் கோழியின் இறைச்சியை விட மையோக்ளோபின் அதிகமாக இருந்தாலும் மாட்டிறைச்சியை விட மிகவும் குறைவு. இறைச்சி நன்றாக சமைக்கப்படும்போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது.

இதன் காரணம் மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது.

மனிதர்களின் உணவுப்பழக்கம் மற்றும் அவர்களின் ஆயுள் காலம் குறித்து ஆய்வு மேற்கொண்டதில், மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணத்தை தழுவுவதாக கண்டறியப்பட்டது. 1,20,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் இது தெரியவந்துள்ளது.

மாட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறதாம். அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வின் போது தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே இதயபாதிப்பு, பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது.

இதற்குக் காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக் போன்றவை ஆகும். இதுவே இதயநோய், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அதேசமயம் மாட்டிறைச்சிக்கு பதிலாக உலர் பருப்பு, மீன் போன்றவைகளை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்யத்துடன் இருந்தது தெரியவந்தது. எனவே மாட்டிறைச்சியை குறைவாக சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!