இறக்குமதி செய்யப்படும் தங்கம் மற்றும் பிளாட்டினத்திற்கான சுங்கவரி 2 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. உலக அளவில் தங்கம் பயன்பாட்டில் நம்நாடு முதலிடம் வகிக்கிறது. தேவையில் பெரும்பகுதி இறக்குமதி செய்யப்படுவதால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் சுங்கவரி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மதிப்பு கூட்டப்பட்ட தங்க கட்டிகள், பிளாட்டினம் மற்றும் நாணயங்களின் இறக்குமதி மீதான அடிப்படை சுங்கவரி 2 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகவும், மதிப்பு கூட்டப்படாத தங்கத்திற்கு சுங்க வரி 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
வடிவமைக்கப்பட்டு, மதிப்பு கூட்டப்பட்ட ஆபரணக்கற்கள், வைரங்களுக்கான அடிப்படை சுங்கவரி 2 சதவீதமாக உயர்கிறது. தூய்மையாக்கப்பட்ட தங்கத்திற்கான உற்பத்தி வரி 1.5 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தங்கம் மீதான சுங்க வரி உயர்வால் வரும் காலங்களில் தங்கம் விலை 3 முதல் 4 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது என்று ஜெம்ஸ் மற்றும் ஜுவல்லரி ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் தலைவர் சஞ்சீவ் கோத்தாரி தெரிவித்தார்.
|