Menu Left Menu Right
விளையாட்டு
ஜெர்மனிக்கு கைகொடுப்பாரா முல்லர்
Default

ரியோ டி ஜெனிரோ: உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடக்கும் காலிறுதிப் போட்டியில், ஐரோப்பிய அணிகளான ஜெர்மனி, பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. தாமஸ் முல்லர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஜெர்மனியை அரையிறுதிக்கு அழைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேசிலில், 20வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. ரியோ டி ஜெனிரோவில் இன்று நடக்கும் காலிறுதியில், உலகின் ‘நம்பர்–2’ அணியான ஜெர்மனி, 17வது இடத்தில் உள்ள பிரான்சை எதிர்கொள்கிறது.

முல்லர் நம்பிக்கை:

போர்ச்சுகலை வீழ்த்தி உலக கோப்பை தொடரை வெற்றியுடன் துவக்கிய ஜெர்மனி அணி, கானாவுக்கு எதிராக ‘டிரா’ செய்தது. பின், அமெரிக்காவை வீழ்த்தி, 7 புள்ளிகளுடன் ‘ஜி’ பிரிவில் முதலிடம் பிடித்தது. அடுத்து நடந்த ‘ரவுண்டு–16’ சுற்றில், கூடுதல் நேரத்தில் எழுச்சி கண்ட ஜெர்மனி 2–1 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது.

ஒரு ‘ஹாட்ரிக்’ உட்பட 4 கோல் அடித்துள்ள தாமஸ் முல்லர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அல்ஜீரியாவுக்கு எதிரான ‘நாக்–அவுட்’ போட்டியில் ஒரு கோல் கூட அடிக்காமல் ஏமாற்றிய இவர், இன்று எழுச்சி கண்டால் நல்லது.

கடந்த போட்டியில் களமிறங்காத மிராஸ்லாவ் குளோஸ் இன்று வாய்ப்பு பெறலாம். இவர் இன்று ஒரு கோல் அடிக்கும் பட்சத்தில், உலக கோப்பையில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில், பிரேசில் ஜாம்பவான் ரொனால்டோவை பின்தள்ளி முதலிடம் பிடிக்கலாம். தொடையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்ட பொடோல்ஸ்கி, காய்ச்சலில் இருந்து குணமடைந்த ஹம்மல்ஸ் இன்று விளையாட இருப்பது கூடுதல் பலம். அல்ஜீரியாவுக்கு எதிராக தலா ஒரு கோல் அடித்த ஸ்சுரல், ஆசில் ஆகியோர் இன்றும் கைகொடுக்கலாம்.

பென்சிமா எதிர்பார்ப்பு:

ஹோண்டுராஸ், சுவிட்சர்லாந்து அணிகளை வீழ்த்திய பிரான்ஸ் அணி, ஈகுவடாருக்கு எதிராக ‘டிரா’ செய்து, ‘இ’ பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. நைஜீரியாவுக்கு எதிரான ‘ரவுண்டு–16’ சுற்றுப் போட்டியில், கடைசி நேரத்தில் எழுச்சி கண்ட பிரான்ஸ் அணி 2–0 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு தகுதி பெற்றது.

லீக் போட்டியில் 3 கோல் அடித்த பென்சிமா, நைஜீரியாவுக்கு எதிரான ‘ரவுண்டு–16’ போட்டியில் ஒரு கோல் கூட அடிக்காதது ஏமாற்றம். இவர் இன்று அசத்தும் பட்சத்தில், அரையிறுதிக்கு சுலபமாக தகுதி பெறலாம். இதுவரை தலா ஒரு கோல் அடித்துள்ள ஆலிவர் ஜிரவுடு, மாத்யூ வல்புயனா, மடுய்டி, சிசோகோ, பால் போக்பா உள்ளிட்டோர் மீண்டும் கைகொடுக்கலாம்.

25

சர்வதேச கால்பந்து அரங்கில், பிரான்ஸ்–ஜெர்மனி அணிகள் 25 முறை மோதின. இதில் பிரான்ஸ் 11, ஜெர்மனி 8 போட்டிகளில் வெற்றி பெற்றன. ஆறு போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தன.

83

பிரான்ஸ், ஜெர்மனி அணிகள் மோதிய 25 போட்டிகளில் மொத்தம் 83 கோல்கள் அடிக்கப்பட்டன. இதில் பிரான்ஸ் 41, ஜெர்மனி 43 கோல்கள் அடித்தன.

3

உலக கோப்பை கால்பந்து வரலாற்றில், பிரான்ஸ்–ஜெர்மனி அணிகள் மூன்று முறை மோதின. இதில் ஜெர்மனி 2, பிரான்ஸ் ஒரு போட்டியில் வென்றன.

* 1958ல் நடந்த 3வது இடத்துக்கான போட்டியில், பிரான்ஸ் அணி 6–3 என ஜெர்மனியை வீழ்த்தியது.

* 1982ல் நடந்த அரையிறுதியில், ஜெர்மனி அணி 5–4 என ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் பிரான்சை தோற்கடித்தது.

* 1986ல் நடந்த அரையிறுதியில், ஜெர்மனி அணி 2–0 என பிரான்சை மீண்டும் வீழ்த்தி, ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

28

1986ல் நடந்த அரையிறுதியில், பிரான்ஸ் அணி, ஜெர்மனியிடம் வீழ்ந்தது. இத்தோல்விக்கு 28 ஆண்டுகளுக்கு பின் பதிலடி கொடுக்க பிரான்ஸ் அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!