Menu Left Menu Right
விளையாட்டு
ராயல்ஸை வெளியேற்றியது டெக்கான் சார்ஜர்ஸ்
Default

ஐதராபாத் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஐதராபாத், ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் டிராவிட், ரஹானே களமிறங்கினர். ரஹானே 6, வாட்சன் 13, பின்னி 7 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, ராஜஸ்தான் திணறியது. டிராவிட் 39 ரன் எடுத்து அவுட் ஆனார்.

ஓவைஸ் ஷா 28, மெனரியா 20 ரன் எடுத்தனர். ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்து வென்றது. அக்ஷத் 42, தவான் 26, டூமினி 24 ரன் எடுத்தனர். இந்த தோல்வியால் ராஜஸ்தான் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!