|
பரமக்குடி நகராட்சி 16வது வார்டில் ஒரு மாதமாக தெருவிளக்குகள் எரியாமல் உள்ளதால் இருட்டில் திருடர் பயம் அதிகரித்துள்ளது. பரமக்குடியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் தொடர்ந்து மூன்று முறை சவுகதலி தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மர் லோடு தாங்காமல் வெடித்தது. இதனால் கூடுதலாக ஒரு டிரான்ஸ்பார்மர்
நிறுவப்பட்டது. இதில் எல்லைப்புற காந்தி, சரோஜினி தேவி தெருக்களின் விளக்குகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டன. இருப்பினும் குறைந்தழுத்த மின்சாரத்தால்
இன்று வரை இரண்டு சோடியம் மற்றும் 10க்கும் மேற்பட்ட டியூப்லைட்டுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. பொதுமக்கள் இரவில் அச்சத்துடன் நடமாடி
வருகின்றனர். இதுகுறித்து 16வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் கூறும் போது: நகராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்றார்.
மின்வாரிய மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ""பிரச்னை விரைவில் தீரும்,'' என்றனர்.
|