|
கோவை:பள்ளிக் குழந்தைகள் கொலை வழக்கில், சாட்சிகளிடம் மறுவிசாரணை நடத்த அனுமதி கேட்கும் மனு, வரும் 21ல் விசாரிக்கப்படுகிறது. பள்ளிக்குழந்தைகள் முஸ்கின், ரித்திக் ஆகியோரை கடத்தி, கொலை செய்த வழக்கு, கோவை மகிளா கோர்ட்டில் நடக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட டிராக்டர் டிரைவர் மனோகரனுக்காக, இலவச சட்டமைய வக்கீல் இருதயராஜ் ஆஜராகி, சாட்சிகளை விசாரணை செய்தார்.
ஏறக்குறைய, 44 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மனோகரன் கோர்ட்டில் ஆஜராகி," இதுவரை நடந்த சாட்சி விசாரணை, திருப்தியாக இல்லை. தனக்காக ஆஜராகும் வக்கீலை நீக்கிவிட்டு, வக்கீல் ராஜேந்திரனை நியமித்து, மறுவிசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என, மனுதாக்கல் செய்தார். இம்மனுவை பரிசீலித்த கோர்ட், வக்கீலை மாற்றிக் கொள்ள அனுமதி அளித்தது. ஆனால், சாட்சிகளிடம் மறு விசாரணை என்ற கோரிக்கை மீதான, விசாரணையை வரும் 21க்கு நீதிபதி ஒத்திவைத்தார். இதனைத் தொடர்ந்து, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மனோகரனுக்காக, வக்கீல் ராஜேந்திரன் ஆஜரானார்.
|