Menu Left Menu Right
வேளாண்மை
பாரம்பரியமிக்க காட்டு யானம் நெல் ரகம்
Default

திருவள்ளூர் மாவட்டத்தில், புதிய முயற்சியாக, பாரம்பரியமிக்க காட்டு யானம் நெல் ரகம் பயிரிடப்பட்டு உள்ளது.

இந்த நெல் ரகம் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை தருமாறு, வேளாண் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்று, காட்டு யானம்.
ஏழு அடி உயரம் வளரக்கூடியது.
ஒவ்வொரு கதிரிலும், நெல் மணிகள், கொத்து, கொத்தாக விளையும் ரகம்.
திருவாலங்காடு ஒன்றியம், ராமாபுரம் கிராமத்தில், ஒன்றே முக்கால் ஏக்கர் பரப்பளவில், விவசாயி பாரதி என்பவர், காட்டு யானம் நெல் ரகத்தை பயிரிட்டுள்ளார்
ஒரு ஏக்கருக்கு, ஒன்றரை கிலோ விதை நெல் போதுமானது.
வயலில் விதைத்த, 18 நாட்களில், நாற்று தயாராகி விடும்.
நாற்றை, ஒரு அடி இடைவெளியில் நட வேண்டும்.
165 நாளில், பயிர் அறுவடைக்குத் தயாராகி விடும்.
உரம் தேவையில்லை என்பதால், அதிக செலவு இருக்காது.
ஒரு ஏக்கருக்கு, 20 – 25 மூட்டை நெல் கிடைக்கும்.
இதில், சராசரியாக, 1000 கிலோ அரிசி கிடைக்கும்.
சந்தையில், ஒரு கிலோ அரிசி 150 ரூபாய்.
ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.
ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கும்.

இந்த காட்டு யானம் நெல் ரகம் குறித்து, விவசாயி பாரதி கூறுகையில்,

”நமது மூதாதையர்களால் பயிரிடப்பட்டு வந்த, பாரம்பரிய நெல் ரகம் இது. களையெடுக்க வேண்டாம். மழை, வெள்ளம் மற்றும், வறட்சியை தாங்கி வளரும். நெற்பயிரின் இலை, தண்டுப் பகுதி மிகவும் வீரிய வளர்ச்சியுடன் உள்ளதால், பூச்சி, நோய் தாக்குதல் இல்லை,” என்றார்.
மேலும், அவர் கூறுகையில், ”மண்வளம், நீர் வளத்துடன், நம் உடல் நலத்தையும், காக்கும் வலிமையுடையது. காட்டு யானம் நெல் ரகம் எளிதில் ஜீரணமாகக் கூடியது. இது, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, மலச்சிக்கல், நரம்புகளை பலப்படுத்துதல் போன்ற, மருத்துவ குணம் கொண்டது,”என்றார்.
வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவு
கடந்த, 24ம் தேதி, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு, விவசாயி பாரதி, காட்டு யானம் நெல் பயிருடன் வந்தார். அவரிடம் விவரங்களை கேட்டறிந்த, ஆட்சியர் வீர ராகவ ராவ், வியப்படைந்தார்.மேலும், இந்த நெல் ரகம் குறித்து, ஆய்வு செய்து, அறிக்கை தயாரித்து கொடுக்குமாறு, வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!