Menu Left Menu Right
வேளாண்மை
நிலக்கடலையில் அதிக இலாபம் பெற வழிகள்
Default

நிலக்கடலையில் அதிகம் இலாபம் பெற தருமபுரி விதைச்சான்று உதவி இயக்குநர் வெ.கிருஷ்ணன் கூறும் வழிமுறைகள்:

இந்த பருவத்தில் டி.எம்.வி 7, வி.ஆர்.ஐ.2, வி.ஆர்.ஐ 3, டிஎம்.வி.13 ஆகிய ரகங்களை சாகுபடி செய்யலாம்.
நிலக்கடலை பயிரில் பயிர் எண்ணிக்கை பராமரிப்பு மிகவும் முக்கியமானதாகும்.
நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு 80 கிலோ விதை காய்கள் தேவைப்படும்.
நிலக்கடலை விதைகளை 30 செ.மீ இடைவெளியில் விதைத்து ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற பயிர் எண்ணிக்கை பராமரிக்க வேண்டும்.
முன்னதாக, நன்கு உழவு செய் நிலத்தில் 5 மெட்ரிக் டன் மக்கிய தொழு உரத்துடன் 7:14:21 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்கள் தரவல்ல 15 கிலோ யூரியா, 87 கிலோ சூப்பர் பாஸ்போட், 35 கிலோ பொட்டாஷ் ஆகியன கலந்து அடி உரமாக இட வேண்டும்.
விதைகள் மூலம் பரவும் பூஞ்சான நோயை தடுக்க விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைகோடெர்மாவிரிடி அல்லது 10 கிராம் சுடோமொனால்புளோரசன்ஸ் அல்லது 4 கிராம் திரம் அல்லது 2 கிராம் கார்பன்டசிம் கொண்டு பூஞ்சான விதை நேர்த்தியும், காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து பயிருக்கு கிடைக்க செய்ய விதைப்பதற்கு முன் ஒரு ஏக்கருக்கு தேவையான விதையை ரைசோபியம் 2 பாக்கெட் மற்றும் பால்போபேக்டீரியா 2 பாக்கெட்டை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து உயிரி உர விதை நேர்த்தி செய்து நிழலில் உலர வைத்து விதைக்க வேண்டும்.

நிலக்கடைலை பயிரில் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை போக்கிட நிலக்கடலை நுண்ணூட்டச்சத்து 5 கிலோவை 20 கிலோ மணலுடன் கலந்து விதைத்து உடன் மண் பரப்பில் தூவ வேண்டும்.
விதைத்த 40-45 ஆவது நாளில் 80 கிலோ ஜிப்சத்தை மண்ணை கொத்தி இட்டு மண் அணைக்க வேண்டும். ஜிப்சத்தில் உள்ள கால்சியம் மற்றும் கந்தகச்சத்து அதிக எண்ணெய் சத்து கொண்ட திரட்சியான காய்கள் அதிக அளவில் உருவாக உதவுகிறது.
மேலும், இதை தவிர்த்து நல்ல வளர்ச்சி அடைந்த முழுமையான பருப்புகளை பெறுவதற்கு ஊட்டச்சத்து கலவையை தெளிக்க வேண்டும்.
இந்த கலவையை தயாரிக்க ஏக்கருக்கு டிஏபி 1.0 கிலோ அம்மோனியம் சல்பேட் 400 கிராம் மற்றும் போராக்ஸ் 200 கிராம் ஆகியவற்றை 15 லிட்டர் தண்ணீரில் ஒன்றாக கலந்து ஒரு இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும்.
மறுநாள் காலை இந்த கலவையை வடிகட்டினால் 12 லிட்டர் வரை தெளிந்த ஊட்டச்சத்து நீர் கிடைக்கும்.
இதனை 188 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து 200 லிட்டர் அளவில் தயார் செய்து இதனுடன் 140 மி.லி. பிளானோபிக்ஸ் சேர்த்து விதைத்த 25 மற்றும் 35 ஆவது நாள்களில் தெளிக்க வேண்டும்.
மேலும், தேவையான இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும்.
இவ்வாறு செய்தால் மானாவாரி பயிரை விட அதிக எண்ணிக்கையிலான காய்கள். திரட்சியான மணிகளை உற்பத்தி செய்யலாம். அதாவது ஏக்கருக்கு 1000 கிலோ முதல் 1250 கிலோ வரை மகசூல் பெறலாம்.
முதிர்ச்சியடைந்த காய்களை நீக்கி சுத்தம் செய்து நல்ல தரமான விதைகளை விவசாயிகள் விதைப்பயன்பாட்டுக்கு வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு வழங்கினால் அந்த விதைகளுக்கு உள்ளூர் சந்தை விலையை விட கூடுதலாக பிரிமியத்தொகை மற்றும் விதை உற்பத்தி மானியம் ஆகியவை உரிய வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மூலம் பெற்று அதிக இலாபம் பெறலாம்.
விவசாயிகளுக்கு விதைப்பண்ணை அமைக்க தேவையான கரு மற்றும் ஆதார நிலக்கடலை விதைகள் அனைத்த வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி விதை அலுவலர்களை தொடர்பு கொண்டு விதைப்பண்ணை அமைக்கும் முறை குறித்து முறையாக தெரிந்து கொண்டு, தரமான ஆதார மற்றும் சான்று விதைகளை உற்பத்தி செய்து அதிக இலாபம் அடையலாம்.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!