Menu Left Menu Right
ஈரோடு செய்திகள்
ரயில் கட்டணம் மீண்டும் உயரும் அபாயம்
Default



ஈரோடு: சாதாரண எக்ஸ்பிரஸில் இருந்து, சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸாக கிரேடு உயர்த்துவதால், கட்டணம் மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரோட்டில் இரவு, ஒன்பது மணிக்கு புறப்பட்டு ஏற்காடு எக்ஸ்பிரஸ் சங்ககிரி, சேலம், பொம்மிடி, மொரப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட, 17 ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று, மறுநாள் அதிகாலை, 4.30 மணிக்கு, சென்னை சென்ட்ரலை அடைகிறது.அதுபோல் மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து இரவு, 10.40க்கு புறப்பட்டு, 17 ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று, மறுநாள் காலை, 6.25 மணிக்கு, ஈரோடு வந்தடைகிறது. நீண்ட நாட்களாகவே எக்ஸ்பிரஸாக இயங்கி வந்த இந்த ரயில், சூப்பர் பாஸ்ட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில் பயணிகள் கூறியதாவது: எக்ஸ்பிரஸாக இருக்கும் போது, பல்வேறு வழியோர ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று சென்றது. எனவே பயணிகள் அதிகம் பயன் அடைந்தனர். குறிப்பாக, கூலி தொழிலாளர்களுக்கும், பெங்களூரு மார்க்கமாக செல்வோர், திருப்பதியில் இருந்து சென்னை செல்வோருக்கு, இது இணைப்பு ரயிலாக இருந்தது. ஆனால் சூப்பர் பாஸ்ட்டாக மாற்றினால், குறிப்பிட்ட ஸ்டேஷன்களில் மட்டுமே நிற்கும்.ஏற்கனவே, தற்போது தான், 14.2 சதவீதம் பயணிகள் கட்டணம் அதிகரித்துள்ளது. சூப்பர் பாஸ்ட் அறிவிப்பால், மேலும் கட்டணம் அதிகரிக்கும்.குறிப்பிட்ட ஸ்டாப்பிங்கில் மட்டும் நின்று சென்றால் ஏழை, எளியவர்கள், கிராம மக்கள் உள்ளிட்டோர் ஏமாற்றம் அடைவர். சூப்பர் பாஸ்டாக அறிவித்தாலும், தற்போதுள்ள ஸ்டாப்பிங்குகளில் ரயில் நின்று செல்ல நடவடிக்கை வேண்டும், என்றனர்.
ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:கட்டண உயர்வுக்கு முன் ஈரோடு-சென்னைக்கு ஓப்பன் டிக்கெட், 97 ரூபாய். கட்டண உயர்வுக்கு பின், 110 ரூபாய். சூப்பர் பாஸ்ட்டானால் மேலும், 15 ரூபாய் அதிகரிக்கும்.முன் பதிவுக்கு, 20 முதல், 25 ரூபாய் வரை அதிகரிக்கும். ரயில்வே பட்ஜெட் மற்றும் புதிய ரயில் கால அட்டவணை வந்தால் தான், ஸ்டாப்பிங், கட்டணங்கள் குறித்து தெரிய வரும். அதுவரை பழைய கட்டணமே வசூலிக்கப்படும்.ஏற்கனவே நின்ற ஸ்டாப்பிங்குகளில், ரயில் நின்று செல்லும். வரும், 13ம் தேதி முதல் சூப்பர் பாஸ்ட் ரயிலாக அறிவிக்கப்படும். ரயில்வே அமைச்சக உத்தரவுப்படி தேவைப்படின் மாற்றங்கள் செய்யப்படும், என்றனர்.
ரயில்வே ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினர் பாட்சா கூறியதாவது: சூப்பர் பாஸ்ட்டாக, ஏற்காடு எக்ஸ்பிரஸை அறிவிப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், முன்பதிவு கட்டணம், 40 ரூபாய் வரை அதிகரிக்கும். இதேபோல் தான், ஓப்பன் டிக்கெட்டும். குறிப்பிட்ட ஸ்டாப்பிங் மட்டுமே நிற்கும். இதனால் இணைப்பு ரயில்களை பிடிப்பதில், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும். கடந்த, 25ம் தேதி தான், கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. சூப்பர் பாஸ்ட் ஆக அறிவித்தால் மீண்டும் ஒரு கட்டண உயர்வை ரயில் பயணிகள் ஏற்க வேண்டி இருக்கும், என்றார்.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!