சூரியம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்கண்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) காலை முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என ஈரோடு நகர மின்செயற்பொறியாளர் அ.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்புஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், காலிங்கராயன்பாளையம், பெருமாள்மலை, ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரி, குமிளம்பரப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேரோடு, மாமரத்துப்பாளையம், மேட்டுப்பாளையம், நொச்சிப்பாளையம், தயிர்பாளையம், கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சூளை, சொட்டையம்பாளையம், ராசாம்பாளையம், தொட்டம்பட்டி.
|