Menu Left Menu Right
சங்க நிகழ்வுகள்
கந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டுவிடு!
Default

* கந்தனும் கண்ணனும் ஒருவரே. இதனை கிருஷ்ணர் பகவத்கீதையில், ""சேனைத் தலைவர்களுள் நான் ஸ்கந்தன்'' என்று குறிப்பிடுகிறார்.
* அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பல பெயர்களும், வடிவங்களும் தாங்கி கடவுள் அவ்வப்போது அவதாரம் செய்கிறார். அதில் சிவனின் உணர்விலிருந்து உதித்த ஒரு கதிரே முருகன்.
* வள்ளியும் தெய்வானையும் முருகனின் இரு துணைவியர். அவர்கள் கிரியாசக்தியையும் (செயல்பாட்டையும்), ஞானசக்தியையும் (வாழ்க்கை இன்னது தான் என்று அறியும் அறிவு) குறிக்கின்றனர்.
* அறியாமை தாண்டவமாடும் இந்தக் கலியுகத்தில் எளிதில் நெருங்கவல்லவராக இருப்பவர் கந்தன். வீர அனுமானிலிருந்து எவ்விதத்திலும் வேறுபட்டவர் அல்ல இவர்.
* முருகன் மீது சிறிதளவு பக்தி செலுத்தினால் கூட, செய்யும் ஒவ்வொரு செயலிலும் வெற்றியைத் தருவதோடு வாழ்வில் செல்வவளமும், ஆன்மிக சுபிட்சமும் வழங்குகிறார்.
* தமிழ்க்கடவுளாகப் போற்றப்படுபவர் முருகன். குகன், கந்தன், குமரேசன், கார்த்திகேயன், சண்முகன், சுப்பிரமணியன், வேலாயுதன் என்பதெல்லாம் அவருக்குரிய பெயர்கள்.
* முருகனுக்கு "சரவணபவன்' என்றும்பெயருண்டு. "நாணல் காட்டில் உதித்தவர்' என்பது பொருள். இவரே தேவர்களின் தலைவனாகவும், தாரகாசுர சம்ஹாரனாகவும் விளங்கினார்.
* முருகனின் திருவடியில் இருக்கும் பாம்பு, முருகன் அச்சமில்லாதவர், அழியாத ஞானம் கொண்டவர் என்பதன் குறியீடாகும்.
* ஞானம், வைராக்கியம், பலம், புகழ்,செல்வம், தெய்வீக சக்தி ஆகிய ஆறு குணங்களைக் கொண்டவர் என்பதால் முருகன் ஆறு முகங்களோடு காட்சியளிக்கிறார்.
* இலங்கையிலுள்ள கதிர்காமத்தில், பக்தியுடன் விரதம் மேற்கொள்பவருக்கு முருகனை நேரில் தரிசிக்கும் பாக்கியம் உண்டாகும்.
* பழநியில் முருகனை தரிசித்தால் தீராத நோய் கூட தீர்ந்து போகும். நட்சத்திரத்தில் கார்த்திகையும், திதியில் வளர்பிறை சஷ்டியும் முருக விரதத்திற்கு உகந்தவை.
* நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படையைப் பக்தியுடன் படிப்போருக்கு தொட்டதெல்லாம் துலங்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
* அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்கள், காவடிச்சிந்து, கந்த சஷ்டிக்கவசம் ஆகிய பாடல்கள் தினமும் பாடுவதற்கு ஏற்றவை.
* முருகபக்தர்கள் விசேஷமாகச் செய்யும் வழிபாடு காவடி. தோளில் ஒரு கம்பைக் கிடத்தி, அதன் இருமுனைகளிலும் கூடைகளைத் தொங்க விட்டிருப்பர். பூக்களாலும், மயிற்பீலிகளாலும் அதை அலங்காரம் செய்வர்.
* பங்குனி உத்திரநாளில் முருகமந்திரமான "ஓம் சரவணபவாய நம' என்ற மந்திரத்தை ஜெபித்து, கந்தனே கதி என அவனுக்கு நம்மைச் சொந்தமாக்கி விட்டால், கருணைக்கடலான அவன் அருளால் எல்லா நன்மைகளும் பெருகும்.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!