|
சொத்து குவிப்பு வழக்கு : கிருபாசங்கர் சிங்கிடம் போலீசார் விசாரணை கருத்துகள்
|
மும்பை: சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் மும்பை காங்கிரஸ் தலைவர் கிருபாசங்கர் சிங்கிற்கும், முன்னாள் ஜார்கண்ட் மாநில நீர்வளத்துறை அமைச்சர் கம்லேஷ் சிங்கிற்கும் இடையேயான தொடர்பு குறித்து விசாரணை நடத்துவதற்காக மும்பை போலீஸ் குழு ஒன்று விரைந்தது. மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து கிருபாசங்கர் சிங்கிற்கு எதிரான ஊழல் புகார்கள் குறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சஞ்சய் திவாரி என்ற சமூக ஆர்வலர் தாக்கல் செய்த பொதுநலன் மனுவை விசாரித்த பிறகு உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. மூத்த காங்கிரஸ் தலைவரான கிருபாசங்கர் சிங் தமது வருமானத்தை மீறி சொத்து சேர்த்துள்ளதாக பொதுநலன் மனுவில் திவாரி குற்றம்சாட்டி இருந்தார்.
மேலும், சொத்து குவிப்பு வழக்கு ஒன்றில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் ஜார்கண்ட் முதல்வர் மதுகோடாவுக்கு கிருபாசங்கர் சிங் நெருக்கமானவர் என்றும், முன்னாள் அமைச்சர் கம்லேஷின் மகள்களில் ஒருவரை கிருபாசங்கரின் மகன் திருமணம் செய்திருப்பதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. கம்லேஷுக்கும் கிருபாசங்கருக்கும் உள்ள தொ டர்பு குறித்து விசாரணை நடத்துவதற்காக மும்பை போலீஸ் குழு ஒன்று ராஞ்சி சென்று விசார ணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் கிருபாசங்கர் சிங்கிற்கு எதிராக சில முக்கிய ஆதாரங்கள் கிடைத் திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
|
|
புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு
|
புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர். முதல்வர் ரங்கசாமியின் பட்ஜெட் உரையை புறக்கணித்து எதிர் கட்சியினர் வெளியேரினர். மேலும், திமுக எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவை கூட்டத்துக்கு வராமலே புறக்கணித்தனர். புதுவை மக்களுக்கு வாஷிங்மெஷின், மிக்சி மற்றும் கிரைண்டர் தரப்படும் என ரங்கசாமி உறுதியளித்துள்ளார். கொடுத்த தேர்தல் வாக்குறுதியை முதல்வர் ரங்கசாமி அரசு நிறைவேற்ற£மல் புதிதாக பட்ஜெட் எதற்கு என எதிர்கட்சி எம்எல்ஏ-க்கள் புகார் கூறியுள்ளனர். மேலும், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும், வறட்சி நிவாரணத் தொகையும் ரங்கசாமி அரசு நிறைவேற்றவில்லை என்று எதிர்கட்சி எம்எல்ஏ&க்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
|
|
|
|
|