Menu Left Menu Right
விளையாட்டு
அரையிறுதியில் நெதர்லாந்து
Default



மாற்று கோல் கீப்பராக களமிறங்கிய டிம் க்ருல் பெனால்டி ஷூட் அவுட்டின்போது இரண்டு கோல்களைத் தடுத்து உதவ, நெதர்லாந்து அணி காலிறுதியில் கோஸ்டா ரிகாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் நெதர்லாந்து அணி, ஆர்ஜெண்டினாவை எதிர்கொள்கிறது.

பிரேசிலில் நடைபெற்று வரும் ஃபிஃபா 20-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி காலிறுதி ஆட்டம் சல்வடாரில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் நெதர்லாந்தும், கோஸ்டா ரிகாவும் மோதின.

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், ஷூட் அவுட் முறையில் ஆட்டத்தின் முடிவு நிர்ணயிக்கப்பட்டது.

சபாஷ் க்ருல்: நெதர்லாந்து அணிக்கு ராபின் வேன் பெர்ஸி, அர்ஜென் ராபென், வேஸ்லே ஸ்னெய்டர் மற்றும் டிர்க் குய்ட் கோல் அடித்தனர். கோஸ்டா ரிகா அணி சார்பில் செல்சா போர்ஜஸ், கியான்கர்லோ கொன்ஸலஸ், கிறிஸ்டியன் போலனஸ் ஆகியோர் கோல் அடித்தனர். ஆனால், ப்ரியன் ருயிஸ் மற்றும் மைக்கேல் உமனா அடித்த பந்தை மாற்று கோல் கீப்பராக களமிறங்கிய நெதர்லாந்தின் டிம் க்ரூல் அற்புதமாகத் தடுத்தார். இதனால், நெதர்லாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

வாய்ப்புகள் வீண்: முன்னதாக, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் நெதர்லாந்து அணிக்கு அதிகமுறை கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை அவர்கள் சாதகமாக பயன்படுத்தத் தவறினர். அதோடு, மூன்று முறை நெதர்லாந்து வீரர்கள் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. இதில் இரண்டு "ஷாட்கள்' ஸ்னெய்டர் அடித்தவை.

ஸ்பெயினுக்கு எதிராக கோல் அடித்து வியக்க வைத்த நெதர்லாந்து கேப்டன் வேன் பெர்ஸி இந்த ஆட்டத்தில் வாய்ப்புகளை வீணடித்தார். குய்ட் கொடுத்த பாûஸ மெம்பிஸ் டிபே கோல் கம்பத்துக்கு அருகில் இருந்த பெர்ஸியிடம் கொடுக்க, அதை பெர்ஸி கோல் அடிக்கத் தவறினார்.

முதல் பாதியில் 63 சதவீதம் நெதர்லாந்து அணியினரே பந்தை தங்கள் வசம் வைத்திருந்தனர். இருப்பினும் அவர்களால் கோல் கணக்கைத் தொடங்க முடியவில்லை.

இரண்டாவது பாதியில் இரு வீரர்களும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். பலமுறை விதிமீறல்கள் நடந்தன.



ஆட்ட விவரம்



நெதர்லாந்து கோஸ்டா ரிகா

20 மொத்த ஷாட்கள் 6

15 இலக்கை நோக்கிய ஷாட் 3

15 விதிமீறல் (ஃபௌல்) 13

64% பந்து வசமிருந்தது 36%

11 கார்னர் 1

3 கோல் தடுப்பு 14

13 ஆஃப் சைடு 2

2 மஞ்சள் அட்டை 4





""பெனால்டி ஷூட் அவுட்டின்போது நெதர்லாந்து அணியில் வேறு ஒரு கோல் கீப்பர் இருப்பார் என்பது எங்களுக்கு பதற்றத்தை அளித்தது. ஆனால், நாங்கள் பயப்படவில்லை. ஒருவேளை அவர் ஷூட் அவுட்டில் கோல்களைத் தடுப்பதில் கைதேர்ந்தவராக இருக்கலாம். தற்போது நாங்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம். வருத்தம் இல்லவே இல்லை. என் வீரர்கள் அபார திறமை மிகுந்தவர்கள். பெரிய அணிகளுடன் நேருக்கு நேர் எதிர்த்து நிற்க முடியும் என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம்''



லூயிஸ் பின்டோ, கோஸ்டா ரிகா பயிற்சியாளர்.



பயிற்சியாளர் எடுத்த தீர்க்கமான முடிவு



நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு களத்தில் 11 வீரர்கள் பாடுபட்டனர் என்றால், களத்துக்கு வெளியே இருந்து பாடுபட்டவர் வேன் கால். நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர்.

கூடுதல் நேரத்திலும் கோல் அடிக்கப்படவில்லை என்பதை அறிகிறார். உடனே மாற்று கோல் கீப்பர் டிம் க்ரூலை "வார்ம் அப்' செய்யச் சொல்கிறார். அவர் நினைத்தபடியே ஆட்டத்தின் முடிவு ஷூட் அவுட் முறையில் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. உடனே களத்தில் இருந்த கோல் கீப்பர் ஜேஸ்பர் சிலிசனை வெளியே வர வைத்து விட்டு டிம் க்ரூலை களமிறக்கினார். வேன் கால் கணிப்புப் படியே ஷூட் அவுட்டில் இரண்டு கோல்களைத் தடுத்து ஆட்டத்தின் நாயகனாகி விட்டார் டிம் க்ரூல். ஒருவேளை நெதர்லாந்து அணி தோல்வியடைந்திருந்தால் பயிற்சியாளர் எடுத்த முடிவு தவறானது என்ற விமர்சனம் எழுந்திருக்கும்.

அதை அவரும் அறிந்து வைத்திருந்தார். கடைசி நேரத்தில் கோல் கீப்பரை மாற்றியது குறித்து வேன் கால் கூறுகையில் "கோல் கீப்பரை மாற்றுவது குறித்து முன்கூட்டியே ஜேஸ்பரிடம் சொல்லவில்லை. ஒருவேளை அப்படி தெரிவித்திருந்தால் அது அவருக்கு ஏமாற்றம் அளித்திருக்கும். ஒவ்வொரு கோல் கீப்பருக்கும் ஒரு திறமை இருக்கும். இன்று அதை டிம் க்ரூல் நிரூபித்து விட்டார். ஒருவேளை நாங்கள் தோல்வியடைந்திருந்தால் என் முடிவு தவறாகி இருக்கும்' என்றார்.

விளையாட்டில் சில நேரங்களில் தீர்க்கமாக எடுக்கப்படும் முடிவுகள் கைகொடுக்கும், அல்லது காலை வாரும். வேன் கால் எடுத்த தீர்க்கமான

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!