மதுரையில் கார் கண்ணாடிகளில் கறுப்பு பிலிம் ஒட்டியிருந்தால், இன்று(மே 26) முதல் அபராதம் ரூ.100 விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். கார் கண்ணாடிகளில் கறுப்பு பிலிம் ஒட்டப்படுவதால், உள்ளே யார் உள்ளனர், என்ன நடக்கிறது என்பதை அறிய முடியவில்லை. இதை பயன்படுத்தி, சட்டவிரோத செயல்கள் நடப்பதாக சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியது.கார் முன்புறம் மற்றும் பின்புற கண்ணாடிகளில் ஒட்டப்படும் கறுப்பு பிலிம்கள், 70 சதவீதம் உள்ளே இருக்கும் நபர்களை பார்க்கும் வகையில் இருக்க வேண்டும். ஜன்னல் கண்ணாடிகள் வழியாக 50 சதவீதம் பார்க்கும் வகையில் கறுப்பு பிலிம்கள் இருக்க வேண்டும். நேற்றே அபராதம் விதிக்கப்படும் என போலீசார் அறிவித்திருந்த நிலையில், வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ் கொடுத்து எச்சரித்தனர். சில கார்களில் கறுப்பு பிலிம்களை அகற்றினர். கோரிப்பாளையத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், துணைகமிஷனர் திருநாவுக்கரசு, போக்குவரத்து உதவிகமிஷனர் எல்லப்பராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர். இன்று( மே 26) முதல், கறுப்பு பிலிம்களை அகற்றாவிட்டால், மோட்டார் வாகன சட்டப்படி, ரூ.100 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து மீறினால், ரூ.300 அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்
|