ஆப்கானிஸ்தானில் 27 தீவிரவாதிகள் நேற்று அரசிடம் சரணடைந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஹெரட் மாகாணம் குசரா மாவட்டத்தில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த கமாண்டர் முல்லா குலாம் சகி தலைமையிலான 7 தீவிரவாதிகள் நேற்று சரணடைந்ததாக மாகாண கவர்னர் அசீலுதீன் தெரிவித்துள்ளார். இதுபோல் நங்கர்ஹர் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் 20 தலிபான் தீவிரவாதிகள் சரணடைந்ததாக அம்மாகாண அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
|