இஸ்லாமாபாத் : தங்கள் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, மீன் பிடித்ததாகக் கூறி, 31 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் பிடித்து சென்றனர்.பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, மீன் பிடித்ததாக கூறி, கடந்த ஆண்டில் மட்டும் 23 படகுகளுடன் 122 இந்தியர்களை பாகிஸ்தான் கைது செய்தது. இந்நிலையில், மீன் வளமிக்க பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் சென்று மீன் பிடித்ததாக கூறி, 14 படகுகளுடன் 31 இந்திய மீனவர்களை அந்நாட்டு கடற்படையினர் பிடித்துச் சென்றனர். ‘அத்துமீறி சட்ட விரோதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் மீன் பிடித்ததால் 31 இந்தியரை பிடித்துச் சென்றோம்.
|