G.V.Prakash kumar-Sainthavi wedding மேலும் படங்கள்தான் 12 ஆண்டுகளாக காதலித்து வந்த பாடகி சைந்தவியை, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இன்று(ஜூன் 27ம் தேதி) கரம்பிடித்தார். இவர்களை திரையுலகினர் நேரில் வந்து வாழ்த்தினர். வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். அதையடுத்து வேகமாக வளர்ந்த அவர், தற்போது முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார். இவரும், பாடகி சைந்தவியும் கடந்த 12 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். காதல் பற்றி அவர்கள் பெற்றோரிடம் சொல்லியபோது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், திருமணம் செய்து வைக்க சம்மதம் சொன்னார்களாம்.அதன்பிறகு இரண்டுபேரின் பெற்றோரும் கலந்து பேசி, சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடத்தினர். அப்போது ஜூன் மாதம் 27-ந்தேதி ஜி.வி.பிரகாஷ்குமார்-சைந்தவி திருமணத்தை நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இன்று ஜூன் 27ம் தேதி, வியாழக்கிழமை, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வள்ளியம்மை ஹால்- மேயர் ராமநாதன் செட்டியார் சென்டரில் அவர்களது திருமணம் நடைபெற்றது. மணமகள் சைந்தவி கழுத்தில் மணமகன் ஜி.வி.பிரகாஷ் தாலி கட்டினார். திருமணம் இருவீட்டாரது பாரம்பரிய முறைப்படி நடந்தது.இவர்களது திருமணத்திற்கு டைரக்டர் பாலா அவரது மனைவி, மணிரத்னம்-சுஹாசினி, பாலுமகேந்திரா, பாக்யராஜ்-பூர்ணிமா, சாந்தனு, சூர்யா, தன்சிகா, இசையமைப்பாளர் தேவா, பாடலாசிரியர்கள் பா.விஜய், சினேகன், ஷோபா சந்திரசேகர், எடிட்டர் மோகன், யு.டி.வி. தனஞ்ஜெயன், பின்னணி பாடகர்கள் எல்.ஆர்.ஈஸ்வரி, நித்யஸ்ரீ மகாதேவன், உன்னி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நேரில் வந்து வாழ்த்தினர்.இன்று(ஜூன் 27ம் தேதி) மாலை 6.30 மணிக்கு திருமணம் நடந்த மேயர் ராமநாதன் செட்டியார் சென்டரிலேயே திருமண வரவேற்பும் நடக்கிறது. இதிலும் திரையுலகம் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்கிறார்கள்.ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி திருமணத்திற்கு தினமலரும் தனது திருமண வாழ்த்தை தெரிவித்து கொள்கிறது...!!
|