சரவணராஜ் மூவி கம்பைன்ஸ் சார்பில் எத்திராஜ், டாக்டர் சரவணன் தயாரிக்கும் படம், ‘சட்டென்று மாறுது வானிலை’. சஞ்ஜெய், அமீத் ஹீரோக்கள். ரோஸ் மிண்டா ஹீரோயின். நாசர், ஷியாம், எத்திராஜ், பூந்தமிழ், ரமணி, சவுதாமினி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பானு முருகன். இசை, ஷியாம் மோகன். பாடல்கள்: ஏகாதசி, வினுப்பிரியா, துரைபாரதி. எழுதி இயக்கி, இணைந்து தயாரிக்கும் சி.எஸ்.ரவி பெருமாள் கூறியதாவது: தனது காதலி மனைவியாகும்போது, காதலிக்கத் தயங்குகிறான் ஆண். காதலன் கணவனாக வரும்போது, அதே காதலுடன் வாழ்வது இல்லை பெண். இப்படி மாறுபட்ட மனநிலையுடன் வாழும் தம்பதிகளைப் பற்றிய கதையாக படம் உருவாகிறது. மலேசியா, சிங்கப்பூர், மும்பை, ஐதராபாத், கோவா பகுதிகளில் ஷூட்டிங் நடந்து முடிந்தது.
|