நயன்தாராவுடனான, காதல் முறிந்ததால், சில காலம், ரொம்பவும் நல்ல பிள்ளையாக அடக்கி வாசித்த சிம்பு, மீண்டும் காதல் வலையில் சிக்கியுள்ளதாக, கோடம்பக்கம் வட்டாரங்கள் கும்மியடிக்கின்றன. "வாலு என்ற படத்தில், சிம்பு, சந்தானம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தில், சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார், ஹன்சிகா. இவர்கள், இருவருக்கும் இடையே, காதல் தீ பற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், படக் குழுவினரோ, " படப் பிடிப்பு இடைவெளியில், சக நடிகர்கள், ஜாலியாக பேசிக் கொள்வது, சாதாரண விஷயம். இதை, "பில்டப் செய்து, யாரோ, கதை கட்டி விட்டுள்ளனர். மற்றபடி, இருவருக்கும் இடையே, காதல் எதுவும் இல்லை என்கின்றன. இதுகுறித்து, சிம்புவும், ஹன்சிகாவும் வெளிப்படையாக கூறினால் தான், உண்மை தெரியவரும் என்கின்றன, கோலிவுட் வட்டாரங்கள்.
|