மும்பை: கடந்த சில நாட்களாக ஐபிஎல் தொடர் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், போட்டியின் போது கறுப்புப் பணம் பயன்படுத்துவதாக பாஜக கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆசாத் தெரிவித்துள்ளார்.முன்னதாக, மும்பை ஆடம்பர ஓட்டலில் நடந்த பார்ட்டியில் போதை மருந்து சாப்பிட்டு உற்சாகமாக ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்ட 96 பேரை போலீசார் அதிரடியாக பிடித்தனர். இதில் ஐபிஎல் புனே அணி வீரர்கள் 2 பேர், நடிகைகள், வெளிநாட்டினர் அடங்குவர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, போதை மருந்து சாப்பிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மும்பையின் ஜூஹூ கடற்கரை பகுதியில் உள்ள ஜே.ஆர்.மத்ரே சாலையில் ஓக்வுட்ஸ் ஆடம்பர சொகுசு ஓட்டல் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலையும் ‘வீக்எண்ட்’ பார்ட்டி நடக்கும். நள்ளிரவு வரை பார்ட்டி நடக்கும். இதில் முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோர் பங்கேற்பார்கள்.ஆபாச நடனம்இந்நிலையில், ஓட்டலில் நடக்கும் வீக்எண்ட் பார்ட்டியில் அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனமாடுவதாகவும், பலர் போதை மருந்து சாப்பிடுவதாகவும் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் நேற்று இரவு ஓக்வுட்ஸ் ஓட்டலுக்குள் புகுந்து அதிரடி சோதனை செய்தனர். மாடியில் 96 பேர் அரைகுறை ஆடையில் ஆபாச நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றிவளைத்தனர். அவர்களில் வாலிபர்கள் 58 பேர், இளம்பெண்கள் 38 பேர் அடங்குவர். நடிகைகள் ஹிமான்ஷி சவுத்ரி, அபூர்வா அக்னிஹோத்ரி உள்பட சிலரையும் ஐபிஎல் புனே அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர் ராகுல் சர்மா, தென் ஆப்ரிக்க வீரர் வெய்னி பர்னல் ஆகியோரையும் போலீசார் பிடித்து சென்றனர்.தொடரும் சர்ச்சைகள்ஏற்கனவே, ஐபிஎல் போட்டியில் மேட்ச் பிக்சிங், அமெரிக்க பெண் சோகல் ஹமீத்துக்கு பெங்களூர் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர் போமர்ஸ்பர்க் பாலியல் தொந்தரவு கொடுத்தது போன்ற பிரச்னைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், போதை மருந்து சாப்பிட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் புனே வீரர்கள் 2 பேர் பிடிபட்டிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.இதுகுறித்து கூடுதல் கமிஷனர் விஷ்வாஸ் நாக்ரி பாட்டீல் கூறியதாவது:ஓட்டலில் திடீர் சோதனை நடத்தியதில், அங்கு 110 கிராம் கோகைன் போதை பவுடர், போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கிருந்த 96 பேரை போலீசார் பிடித்து உடனடியாக கூப்பர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனைக்காக அவர்களது ரத்தம், சிறுநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டன. யார் யார் போதை மருந்து சாப்பிட்டிருந்தார்கள் என்பது பரிசோதனைக்கு பிறகு தெரிய வரும். அதன்பிறகு அவர்கள் மீது போதை மருந்து வைத்திருந்தது, உட்கொண்டது என 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.ஓட்டலில் பிடிபட்டவர்கள் அனைவரது விவரமும் சேகரித்த பிறகு, வீட்டுக்கு அனுப்பிவிட்டோம். பார்ட்டிக்கு ஏற்பாடு செய்த விசேஷ் விஜய் ஹூண்டா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓட்டலுக்கு கோகைன் போதை பொருள் சப்ளை செய்தது யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் கலீனாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு விஷ்வாஸ் கூறினார்.ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும்இதனையடுத்து, ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாஜக கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆசாத் தெரிவித்துள்ளார். இதனால், ஐபிஎல் போட்டிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது. ஐபிஎல் வீரர், நடிகை திட்டவட்ட மறுப்புஐபிஎல் வீரர் ராகுல் சர்மா கூறுகையில், ÔÔபோலீசார் சோதனை நடத்தியபோது ஓக்வுட்ஸ் ஓட்டலில் நான் இருந்தது உண்மை. ஓட்டலில் நடக்கும் பர்த்டே பார்ட்டிக்காக சென்றேன். ஓட்டலில் வேறு இடத்தில் மது, போதையுடன் பார்ட்டி நடப்பதும், அங்கு போலீசார் சோதனை நடத்த போவதும் எனக்கு தெரியாதுÕÕ என்றார்.நடிகை ஹிமான்ஷி கூறுகையில்,, ÔÔஓட்டலில் போதை பார்ட்டி நடக்கவில்லை. சாதாரண பார்ட்டிதான் நடந்தது. மருத்துவமனையில் ரத்த மாதிரி எடுத்துள்ளார்கள். அதில் உண்மை தெரிந்துவிடும்ÕÕ என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.
|