நடப்பு சாம்பயினான ஸ்பெயின் வெளியேறி விட்டது. சில ஐரோப்பிய நாடுகள் ஏமாற்றம் அளித்தன. சில தென் அமெரிக்க நாடுகள் ஜொலித்து வருகின்றன. எதிர்பார்த்த நட்சத்திரங்கள் பிரகாசிக்கத் தவறின. அதேநேரத்தில் ஓரிரு ஆட்டங்களின் மூலம் சில வீரர்கள் கவனிக்க வைத்து விட்டனர். இதுவரை நடைபெற்ற 56 ஆட்டங்களில் 171 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதுபோல இன்னும் ஏராளமான சுவாரஸ்யங்கள் அரங்கேறி வருகின்றன. ஆட்ட ரீதியாக புள்ளி விவரங்களை ஆய்வு செய்தால் எதிர்பார்ப்புக்கு மாறான சில புது தகவல்கள் கிடைக்கின்றன.
ஹிட் உட்வொர்க்
இலக்கை நோக்கி ஷாட் அடிக்கும்போது பந்து கோல் கம்பத்தின் விளிம்பில் பட்டு வெளியே வருவதற்கு ஹிட் உட்வொர்க் என்று பெயர். இந்த உலகக் கோப்பையில் பிரான்ஸ் 6, கிரேக்கம் 4, நெதர்லாந்து மற்றும் கேமரூன் 3, போர்ச்சுகல் 2 ஹிட் உட்வொர்க் ஷாட்களை அடித்துள்ளன. வீரர்கள் வரிசையில் நெதர்லாந்தின் ஸ்டெஃபான் டி விர்ஜ் மற்றும் பிரான்ஸின், யோகன் கேபயே, கிரீஸ்மன் தலா 2 ஷாட்களை அடித்துள்ளனர்.
கிளியரன்ஸ்
எதிரணி வீரர்கள் கோல் எல்லையில் ஆதிக்கம் செலுத்தும்போது பந்தை தலையால் முட்டியோ, போராடியோ கோல் அடிக்க விடாமல் தடுப்பதில் சிலி அணியின் கேரி மெடில் மன்னனாகத் திகழ்ந்துள்ளார். இவர் அதிகபட்சமாக 40 முறை கோல் அடிக்க வாய்ப்பு அமையாமல் தடுத்துள்ளார்.
விதிமீறல் (பெளல்)
களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டு விதிகளை மீறியதில் ஈரானின் ரெஸா கூசனீஜத் முதலிடத்தில் உள்ளார். அவர் 16 ஃபெளல் செய்துள்ளார். பெல்ஜியத்தின் ஃபெலானி (14) அடுத்த இடத்தில் உள்ளார்.
இந்த உலகக் கோப்பையில் அதிக டிரிபிள் (பந்தை நேர்த்தியாக தட்டித் தட்டி கடத்திச் செல்வது) செய்தது யார் என்ற கேள்விக்கு, இதுவரையிலான ஆட்டங்களை உன்னிப்பாக கவனித்தவர்கள் மெஸ்ஸி என எளிதாக பதிலளித்து விடுவார்கள். இப்போட்டியில் இந்த நாள் வரை மெஸ்ஸி 41 முறை டிரிபிள் செய்துள்ளார். ஸ்விட்சர்லாந்து வீரர்களை ஏமாற்றி டி மரியாவுக்கு பந்தை பாஸ் செய்த விதமே மெஸ்ஸியின் டிரிபிளிங் திறமைக்கு ஆகச் சிறந்த உதாரணம். இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பது பிரேசிலின் உலகக் கோப்பை வெல்லும் பொறுப்பை தன் தோளில் சுமந்து நிற்கும் நெய்மர். எதிரணி வீரர்கள் அடிக்கடி காலைத் தட்டிவிட்டபோதிலும் நெய்மர் 36 முறை டிரிபிள் செய்துள்ளார். இதுவே அவர் மீதான எதிர்பார்ப்பு உயரக் காரணம்.
அணி வீரர் டிரிபிள்
மெஸ்ஸி ஆர்ஜெண்டினா 41
நெய்மர் பிரேசில் 36
சான்செஸ் சிலி 35
டி மரியா ஆர்ஜெண்டினா 34
எமினிகி நைஜீரியா 29
இலக்கை நோக்கிய ஷாட்
பெல்ஜியம் அணி எப்போதுமே இலக்கை நோக்கிய ஷாட்கள் அடிப்பதில் திறமையாக செயல்படும். இந்தமுறையும் அதில் மாற்றம் இல்லை. 4 ஆட்டங்களில் 32 முறை இலக்கை நோக்கிய ஷாட்டை அந்த அணி அடித்துள்ளது. ஆனால், இதில் 6 மட்டுமே இலக்கை (கோல்) அடைந்துள்ளன. அதே நேரத்தில் பிரான்ஸ் அணி 31 ஷாட்கள் அடித்து, 10 ஷாட்டுகளை கோலாக மாற்றியுள்ளன.
பிரான்ஸின் நட்சத்திர வீரரான கரீம் பென்ஸிமா அதிகபட்சமாக, இலக்கை நோக்கி 13 ஷாட்கள் அடித்துள்ளார்.
அணி இலக்கை
நோக்கிய ஷாட்
பெல்ஜியம் 32
பிரான்ஸ் 31
ஜெர்மனி 30
பிரேசில் 29
நெதர்லாந்து 27
ஆர்ஜெண்டினா 27
வீரர் அணி இலக்கை
நோக்கிய ஷாட்
பென்ஸிமா பிரான்ஸ் 13
ரொனால்டோ போர்ச்சுகல் 9
நெய்மர் பிரேசில் 9
டி மரியா ஆர்ஜெண்டினா 9
ஷகிரி ஸ்விட்சர்லாந்து 8
ராபென் நெதர்லாந்து 8
ஜெர்மனியின் டிக்கி டாக்கா
டிக்கி டாக்கா என்னும் குறுகிய இடைவெளியில் பாஸ் செய்வதில் ஸ்பெயின்தான் கில்லாடி என நினைத்தோம். ஆனால், இந்தமுறை டிக்கி டாக்கா பாணியில் அசத்தி வருவதில் ஜெர்மனிதான் முன்னிலையில் உள்ளது. மொத்தம் 2,695 பாஸ்களை செய்துள்ளது. அதில் 2,378 பாஸ்கள் வெற்றியடைந்துள்ளன. ஜெர்மனிக்கு அடுத்தபடியாக ஆர்ஜெண்டினா அணி துல்லியமாக பாஸ்களை செய்து வருகிறது. வீரர்கள் வரிசையில் பார்த்தால் ஜெர்மனியின் டோனி க்ரூஸ் முதலிடத்தில் உள்ளார். அவர் செய்த 394 பாஸ்களில் 360 வெற்றிகரமாக சக வீரரைச் சென்றடைந்துள்ளது.
அணி பாஸ் வெற்றி
ஜெர்மனி 2695 2378
ஆர்ஜெண்டினா 2219 1937
சிலி 1957 1569
பிரான்ஸ் 1924 1660
கோல் தடுப்பு
அமெரிக்க அணி காலிறுதிக்கு முன்னேற முடியாமல் போனாலும் பெல்ஜியத்துக்கு எதிராக 16 கோல்களைத் தடுத்து ஒரே நாளில் புகழின் உச்சத்துக்கு சென்று விட்டார் அமெரிக்க கோல் கீப்பர் டிம் ஹோவர்டு. இந்த உலகக் கோப்பையில் அவர்தான் அதிக கோல்களைத் (27) தடுத்துள்ளார்.
துல்லியமான ஷாட்
இலக்கை நோக்கி துல்லியமான
|