Menu Left Menu Right
வேளாண்மை
சிறிய நிலத்தில் வேளாண்மை செய்து லாபம் பெறுவது எப்படி
Default

சிறிய அளவில் வைத்து கொண்டு லாபம் பெற முடியும் என்று நிருபித்து உள்ளார் தர்மபுரி சேர்ந்த முது என்ற விவசாயி. இவரின் வெற்றி ரகசியத்தை பார்ப்போமா?

இவருக்கு 50 சென்ட் நிலம் உள்ளது. இதில், எலுமிச்சை மற்றும் மல்லிகை சாகுபடி செய்கிறார். நேரம் பார்த்து சாகுபடி செய்கிறார். எல்லோரும் போல் இல்லாமல் சரியான பயிரையும் நேரத்திலும் செய்கிறார்.

25 எலுமிச்சை மரங்கள் கோடையில் காவாத்து செய்தால், கோடையில் நல்ல மகசூல் கிடைக்கிறது. திரட்சியான நல்ல நிறம் கொண்ட இந்த எலுமிச்சை பெற அவர் மீன் அமிலத்தை பயன் படுதிகிறார்.

ஒரு மரத்தில் இருந்து 5000 எலுமிச்சை வரி கிடைக்கிறது. ஒன்று ரூ 1.5 விலை போகிறது. சீசனில் மல்லிகை நல்ல விலை ரூ 300/கிலோ வரை போகிறது

இதை தவிர எலுமிச்சை பயிருக்கு ஊடு பயிராக இயற்கை விவசாயம் மூலம் நிலகடலை பயிர் இட்டு 10 மூட்டை கடலை ஒரு மூட்டை ரூ 3000 வரை கிடைக்கிறது

இவற்றால், இவருக்கு வருடம் ரூ 4 லட்சம் வருமானம்
கிடைக்கிறது

இவரின் வெற்றி ரகசியங்கள்:



இயற்கை ஊடு பொருட்கள். இவரிடம் இருக்கும் 5 ஆடு, 5 மாடுகள் மூலம் கிடைக்கும் இயற்கை எரு மட்டுமே பயன் படுத்துவதால், செலவு குறைகிறது
எந்த நேரத்தில் எந்த பயிர்க்கு நல்ல மவுசு இருக்கிறது என்று தெரிந்து பயிர் இடுதல்
இயற்கை விவசாயத்தில் கிடைக்கும் சாகுபடிக்கு கிடைக்கும் நல்ல விலை.
ஒரே பயிரை பயிர் இடாமல் பல பயிர்களை வருடம் முழுவதும் சுழற்சி முறையில் பயிர் இடுவது

முத்துவின் இயற்கை விவசாயம்

10 கிலோ மீன் அழுகலை 10 லிட்டர் புளித்த மோரில் சேர்த்து 15 நாட்கள் ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் வைக்கவும். அவ்வபோது இதை கலக்கி விடவும். இதை பில்ட்டர் செய்து sprayer மூலம் பயிர்கள் மேல் தெளித்தால் நல்ல திரட்சியான எலுமிச்சை, கடலை கிடைக்கும்
வேம்பு புங்கன் நொச்சி போன்ற இலைகளை எடுத்து கசக்கி 10 லிட்டர் கோ கோ மூத்திரம் சேர்த்து புளித்த மோரை சேர்க்கவும். இந்த கலவை ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் 20 நாள் வைத்து இயற்க்கை பூச்சி விரட்டியாக பயன் படுத்தலாம்

இவர் facebook இனைய தலத்தில் விவசாயம் கறக்கலாம் Vivasayam karkalam என்று ஆரம்பித்து 1000 பேர் இவரை follow செய்கின்றனர்

இவரை தொடர்பு கொள்ள

திரு N K P முத்து நகதசம்பட்டி, பென்னாகரம் தாலுகா தருமபுரி மாவட்டம் அலைபேசி எண்: 09344469645

      
உங்கள் - கருத்து *
(Press Ctrl+g or click this   Tamil Letter to toggle between English and Tamil)
இ-மெயில் *
பெயர்*
சரிபார்ப்பு எண்* Numbers
மேற்காணும் எண்ணை பதிவு செய்க*

* குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும்.  வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Submit
 
 
 
 
Advertisements/Default.jpg
இதர மருத்துவ செய்திகள்
symbol முதுகுவலி வராமல் இருக்க - 1
symbol பெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல
symbol வெங்காய தொக்கு
symbol பெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல